பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
Page 1 of 1
பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
பழங்களில் சிறந்தது ஆப்பிள் என்பது பொதுவான கருத்து. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை நாட வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் அதைவிட சிறந்த பழம் பப்பாளி. பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில் தான். 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி.
பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம். மத்திய மற்றும் தென் அமொரிக்காவில் பப்பாளி மரம் "ஆரோக்கிய மரம்" என்றும் பழத்தை "ஆரோக்கிய பழம்" என்றும் சொல்கிறார்கள். காரணம் பப்பாளியில் அனைத்து வைட்டமின் சத்துகள் உள்ளன.
அதில் "போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ் இரும்பு மற்றும் நார்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின்-சி மிக மிக அதிக அளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. சத்தான பழங்களில் பப்பாளி முதலிடம் வகிக்கிறது. நல்ல ஜீரண சக்தியும், ஜீரண கோளாறுகளின் எதிர்ப்பு தன்மையும் இதில் இருப்பதற்கு காரணம் இதில் உள்ள "பாப்பின்" எனப்படும் புரதசத்து, குடல் புழுக்கள் உண்டாவதை பப்பாளி தடுக்கிறது.
மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்வு, நெஞ்சு எரிச்சல், அல்சர், சர்க்கரை வியாதி மற்றும் கண் பார்வை கோளாறுகளுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும். அண்மையில் மலேசியாவில் நடத்திய ஒரு ஆராய்ச்சியில் தொடர்ந்து 4 வாரங்கள் பப்பாளி சாப்பிட்டால் கொழுப்புச்சத்து 19.2 விழுக்காடுகளும் L.D.L 23.3 விழுக்காடுகளும் குறைகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே தகுந்த அளவு பப்பாளி சாப்பிட்டால் இருதய நோய்களிலிருந்து ஓரளவு நம்மை காப்பாற்றி கொள்ளலாம். பாப்பின் எனப்படும் பப்பாளி பழ பால் மருந்துகள் தயாரிக்க உதவுகிறது. முகத்தின் பொலிவுக்காக உபயோகிக்கும் பல கீரிம்களில் பாப்பின் சேர்க்கப்படுகிறது. பொதுவாக தினமும் சில பப்பாளி துண்டுகளை உண்டால் மருத்துவரை நாட வேண்டாம். எப்படி நல்ல பப்பாளி பழத்தை தேர்ந்தெடுப்பது?
1. விரலால் அழுத்தி பார்க்கும்போது குழி விழாமலும். மிகவும் கெட்டியாக இல்லாமலும் இருக்க வேண்டும்.
2. நன்கு பழுத்த பப்பாளியை விட முக்கால் பாகம் பழுத்த பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது.
3. தேவைப்பட்டால் பப்பாளி துண்டுகளுடன் சர்க்கரை, சாட்மசாலா அல்லது லெமன் சூஸ் சேர்த்து சாப்பிடலாம்.
4. குளிர் சாதன பெட்டிகளில் வைத்து சாப்பிடாமல் அவ்வப்போது பழுத்தவுடன் சாப்பிட்டால் பப்பாளி மிக சுவையாகவும் இருக்கும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பப்பாளி ஆப்பிள் ஐஸ்கிரீம்
» பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள்
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?
» பப்பாளி பப்பாளி
» பப்பாளி பப்பாளி
» பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள்
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?
» பப்பாளி பப்பாளி
» பப்பாளி பப்பாளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum