தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முள்ளங்கி சப்பாத்தி

Go down

முள்ளங்கி சப்பாத்தி Empty முள்ளங்கி சப்பாத்தி

Post  oviya Sat Jul 06, 2013 8:53 pm

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 2
கோதுமை மாவு - 1 கப்
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
ஓமம் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
தனியாத் தூள் - 1/2 டீ ஸ்பூன்
எண்ணை - 8 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

* முள்ளங்கியை நன்கு கழுவி பூத்துருவலாக துருவிக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்த மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள், ஓமம் சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கி கோதுமை மாவுடன் சேர்க்கவும்.

* துருவிய முள்ளங்கி, உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து தேவையானால் சிறிது தண்­ணீர் சேர்த்து (முள்ளங்கித் துருவலிலேயே தண்­ணீர் இருக்குமாதலால் தேவையானால் மட்டுமே தண்ணீ­ர் சேர்க்கவும்) சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.

* பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாகத் தட்டி, ஒரு தோசைக் கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் போட்டு இரு பக்கமும் எண்ணை ஊற்றி திருப்பிவிட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்பு:

சப்பாத்தியின் சுவை மற்றும் ஆரோக்கிய சுவையை அதிகரிக்க கேரட் துருவலையும், முள்ளங்கித் துருவலுடன் சேர்க்கலாம்.

முள்ளங்கியையும் ஓமத்தையும் இணைத்து சப்பாத்தி செய்து உடலாருக்கு வழங்குவதானது சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சமையல் ஆகும் .
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum