முதுகு வலிக்கு முழுமையான தீர்வு
Page 1 of 1
முதுகு வலிக்கு முழுமையான தீர்வு
வலி நிவாரண மையத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் எப்படி முழுமையான தீர்வு காண்கிறோம் என்பதை விரிவாக பார்ப்போம்.
தோல் வழியாக ஊடுருவும் டிஸ்க்கை அகற்றும் சிகிச்சை :
தொடர் எக்ஸ்ரே உதவியால் பழுதுபட்ட டிஸ்கை முதுகின் தோல் வழியாக சிறு ஊசியை செலுத்த வேண்டும். அதனினும் சிறிய மயிறிழை அளவு உள்ள ஊசியை அதனுள் செலுத்தி டிஸ்க்குக்குள் நுழைய வேண்டும். இந்த சிறு ஊசியை ஸ்பைன் ஜெட் கன்சோலில் இணைக்க வேண்டும். இந்த இயந்திரத்தை இயக்கினால் டிஸ்க்கினுள் உள்ள ஊசி முனையில் இருந்து ஸ்ப்ரே போன்று நீர் இரைக்கப்படும்.
அதே சமயம் ஊசி முனை சுழன்று டிஸ்க் பாகங்களை கரைக்கும், உதிர்ந்த பாகங்களை நீரோடு சேர்த்து வெளியே உறிஞ்சி எடுத்து விடும். இத்தனை நுணுக்கமான வேலை மூன்றே நிமிடத்தில் முடிந்து விடுகிறது. இந்த சிகிச்சை முடிந்து ஒரு மணி நேரத்தில் வீட்டுக்குச் செல்லலாம். மறுநாளே வேலைக்கும் செல்லலாம்.
எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் ஒரு துளி இரத்தம் கூட வீணாகாமல் டிஸ்கை அகற்றும் இந்த சிகிச்சை மருத்துவ துறை கண்ட மாபெரும் சாதனை. மேற்கு நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியப் பெருமை என் மருத்துவ குழுவையே சாரும்.
ரேடியோ அலை பயன்படுத்தி நரம்பு சிகிச்சை :
பேசட் இணைப்பில் பிரச்சினைகள் ஏற்படுவதால் கழுத்து மற்றும் இடுப்பிலும் அதை சுற்றி உள்ள தசைகளிலும் மரண வலியால் அவதிப்படுபவர்களுக்கு அந்த இணைப்பிலிருந்து வலி உணர்ச்சியை தாங்கிக் செல்லும் மிடியல் பிரன்ச் என்ற நரம்பின் நார்களக்கு ரேடியோ அலையை பயன்படுத்தி சிகிச்சை செய்வதால் இந்த வலி மாயமாக மறைந்துவிடும்.
ஸ்பைனல் கார்டு ஸ்டிமுலேட்டர் :
ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து, அதன் தோல்வியால் மீண்டும் முதுகு மற்றும் கை, கால்களில் வலி ஏற்படுபவர்களுக்கு ஸ்பைனல் கார்டு ஸ்டிமுலேட்டரை பொருத்துவதன் மூலம் வலியை குறைக்க முடியும். தண்டு வடத்தை சுற்றியுள்ள எப்பிடூரல் பகுதியில் தூண்டும் லீடுகளை பொருத்தி அதை பேட்டரி பொருத்திய சிறிய ஸ்டிமுலேட்டரில் இணைத்து தோலுக்கு அடியில் பதிக்க வேண்டும். தொடர்ந்து தண்டு வடத்தை தூண்டுவதால் மூளைக்கு வலியை எடுத்துச் செல்லும் பாதை தடை செய்யப்பட்டு வலி குறைகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
» முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
» முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
» முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
» முதுகு வலிக்கு எளிய உடற்பயிற்சிகள்
» முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
» முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
» முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
» முதுகு வலிக்கு எளிய உடற்பயிற்சிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum