சமணம் வளர்த்த தமிழ்
Page 1 of 1
சமணம் வளர்த்த தமிழ்
விலைரூ.700
ஆசிரியர் : ஜெ.ஸ்ரீசந்திரன்
வெளியீடு: தமிழ் நிலையம்
பகுதி: சமயம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம்: 1,233
"கொல்லாமை நெறியை உலகம் எங்கும் பரப்பும் சமண மதம் மிகவும் தொன்மை மிக்கது. ஜைன சமயம் வேத காலத்திற்கும் முற்பட்டதாக இந்நூல் கூறுகிறது."ரிக்வேதத்தில் ஆதிநாதர் வழிபாடும், "யஜுர் வேதத்தில் நேமிநாதர் வழிபாடும் கூறப்பட்டுள்ளது. 18 புராணங்களிலும் சமண தீர்த்தங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.
வியாசர் எழுதிய, "மகாபாரதத்தின் ஆதிபர்வம் மூன்றாம் அத்யாயத்தில், 26,27 சுலோகங்களின் ஜைன முனிவர் பற்றி குறிப்புகள் உள்ளன.பிரம்ம சூத்திரம், பாகவதம், தீர்த்தங்கரங்களைப் பற்றிப் பேசுகிறது.கி.மு., 527ல் மகாவீரர், 24ம் தீர்த்தங்கரர் பரவலாகப் பாடப்பட்டுள்ளார்.
கி.மு., 365ல் சந்திரகுப்தர், 12 ஆயிரம் சமண முனிவர்களுடன் வந்து, தென்னாட்டில் சமண சமயத்தைப் பரப்பினார்.சமணத்தின் ஐந்து மகாவிரதங்கள் கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, காமம் இன்மை, அவா இன்மை ஆகியன ஆகும்.சமணர்கள் செய்த தமிழ்த்தொண்டு மிகப்பெரிது ஆகும். சமணரால் இலக்கணம், காப்பியம், நீதிநூல்கள், அகராதி ஆகியன தமிழில் வளர்ந்தன.
அகத்தியர் தந்த, "அகத்தியம் முதல் இலக்கண நூல். இரண்டாவது தொல்காப்பியர் தந்த, "தொல்காப்பியம் இதில் உள் மரபியலின் ஆறறிவுக் கோட்பாடு ஜைன சமயக்கொள்கையுடன் பொருத்தி நிற்கிறது.திருக்குறளில், பல அதிகாரங்கள் சமணத்தை விளக்குவதாய் அமைந்துள்ளதாக இந்நூல் கூறுகிறது."ஆதிபகவன், அருகதேவன் என்றும் எண் குணத்தான் சமணம் கூறும் அருட்குணங்கள் எட்டு என்றும், திருக்குறள் ஒப்பு நோக்கப்பட்டுள்ளது.சிலப்பதிகாரம், பதினெண்கீழ்கணக்கு நூல்கள் விரிவாக சமண நோக்கில் ஆராயப்பட்டுள்ளன.பெருங்கதை காப்பியம் சொத்துரிமை ஆண்களுக்கு மட்டுமே உரியது என்றும், பெண்களுக்கு பராமரிப்பும் செலவுகளே வழங்கப்படும் என்று கூறும் தகவல் விந்தையாக உள்ளது.பந்தில் பதிந்த விரல் ரேகையைக் கொண்டு, மதன மஞ்சிகை என்ற மங்கையின் உருவத்தை வரைந்து அறிந்த செய்தி வியப்பில் ஆழ்த்துகிறது.
(பக்.77 - பாகம் 2)நன்னூல் சமண முனிவர் பவணத்தி எழுதியது: நாலடியார், அறநெறிச்சாரம்,
யாப்பருங்கலம், காரிகை போன்ற நூல்களில் சமணத்தின் பங்களிப்பு இங்கே ஆராய்ப்பட்டுள்ளது.
காலந்தோறும் சமணப் பணிகளை அவ்வை துரைச்சாமிப்பிள்ளை குறிப்பிடும் கட்டுரையுடன் மூன்றாம் பாகம் முடிவடைகிறது.செந்தமிழன் வளர்ச்சிக்கு சமணர்கள் தந்த கொடையை மூன்று பாகங்களும் முன்னிறுத்துகின்றன, மூன்று சமணத் தமிழ்ப் பெட்டகங்கள்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சமயம் வளர்த்த சான்றோர்-வைணவம் வளர்த்த பெரியோர்
» தமிழ் வளர்த்த கிருத்தவர்கள்
» அமரர் கல்கியின் கல்கி வளர்த்த தமிழ்
» சிலை வடிவில் வாழும் தமிழ் வளர்த்த பெருமக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum