திருப்பாவை தெளிவுரை
Page 1 of 1
திருப்பாவை தெளிவுரை
திருப்பாவை தெளிவுரை
விலைரூ.80
ஆசிரியர் : ரா.வ.கமலக்கண்ணன்
வெளியீடு: திருவேங்கடவன் பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
Bookmarkபிடித்தவை
திருவேங்கடவன் பதிப்பகம், 8, கக்கன் சாலை, அழகானந்தம் நகர், செவிலிமேடு அஞ்சல், காஞ்சிபுரம்-631502. (பக்கம்: 224.)
`பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும், வேதம் அனைத்துக்கும் வித்தாகும்' என்று பெரியோர்களால் போற்றப்படும் ஷ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவைக்கு இதுவரை பல பெரியோர்களின் உரைகள் வந்துள்ளன; இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி வந்தவற்றில் இந்நூலில் மிகவும் பாராட்டத்தக்க வகையில் வெளிவந்துள்ளது.
உரையாசிரியர் 28 பக்கங்களில் எழுதியுள்ள ஆராய்ச்சி முன்னுரை. அவரின் ஆழ்ந்த அகல அறிவுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது.`சங்கத்தமிழ் மாலை முப்பது' என்று திருப்பாவைக்கு எங்ஙனம் பொருந்தும் என்பதை உரையாசிரியர் பல பக்கங்களில் விளக்கி, நம்மைச் சங்க நூல்களையும் ஓரளவு படித்த ஞானம் பெறச் செய்கிறார். (பக் 21-28), திருப்பாவைக்கு உரை செய்துள்ள முன்னோர்களில் சிலரைப் பற்றி ஆசிரியர் விளக்கியுள்ளது ஆய்வாளர்களுக்குப் பயன்படும் குறிப்புகளாகும். (பக் 36-38), பதினைந்தாம் பாசுரத்தில், `நானே தான் ஆயிடுக' என்ற சொல்லாட்சிக்கு, உரையாசிரியர் கூறும் விளக்கத்தை இன்றைய மனிதர்கள், குறிப்பாக வைணவர்கள், பெரும்பாலோர் கடைப்பிடிப்பது இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.இந்நூலில் ஒவ்வொரு பாசுரத்திற்கும் பொருள், சிறப்புப் பொருள், உள்ளுறை என்று பகுத்து விளக்குவது நூலை நாம் நன்கு சுவைக்கவும், திருப்பாவையின் உயர்வை எண்ணி எண்ணி மகிழவும் உதவுகிறது; மிக மிகப் பயனுள்ள அருமையான நூல்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» திருப்பாவை தெளிவுரை
» திருக்குறள் தெளிவுரை
» திருக்குறள் தெளிவுரை
» திருக்குறள் தெளிவுரை
» திருவாசகம் தெளிவுரை
» திருக்குறள் தெளிவுரை
» திருக்குறள் தெளிவுரை
» திருக்குறள் தெளிவுரை
» திருவாசகம் தெளிவுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum