தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘தலைவன்’ பாஸ்-ஸின் அரசியல் அதிரடி

Go down

‘தலைவன்’ பாஸ்-ஸின் அரசியல் அதிரடி Empty ‘தலைவன்’ பாஸ்-ஸின் அரசியல் அதிரடி

Post  ishwarya Wed May 29, 2013 2:44 pm

ப்ளு ஓஷன் பிக்சர்ஸ் சார்பில் மிக பிரமாண்டமாக புதுமுக நாயகன் பாஸ் நடித்துள்ள ‘தலைவன்’ படத்தை சித்திரைச் செல்வன் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் நாயகன் பாஸ் என்கிற பாஸ்கருக்கு நாயகியாக நிகிஷா படேல் நடித்துள்ளார்.

இவர்களுடன் சந்தான பாரதி, பாண்டு, சுமன் ஷெட்டி, மனோபாலா, வின்சென்ட் அசோகன், அபிஷேக், ஒ.ஏ .கே .சுந்தர், வாசு விக்ரம் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

கமெராமேன் பூபதி, இசையமைப்பாளர் வித்யாசாகர், ஆண்டனி, ஸ்டன்ட் -சூப்பர் சுப்பராயன், நடனம் -சிவசங்கர், கலா மற்றும் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளார்கள்.

வித்யாசாகர் இசையில் படத்தின் பாடல்களை கவிஞர் அறிவுமதி, யுக பாரதி, விவேகா, மதன் கார்க்கி ஆகியோர் எழுதியுள்ளார்கள். ஐந்து பாடல்களில் பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் ”அம்மா….” பாடலை உருகி பாடியிருக்கிறார்.

சென்னை காமராஜர் அரங்கில் நடந்த விழாவில் பாடல் காட்சிகள் மற்றும் கொமடிக் காட்சிகள் திரையிடப்பட்டன. திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் ஆவலாக கண்டு ரசித்தனர்.

தலைவன் படத்தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் பேசும் போது, நாயகன் பாஸ் அதிரடியாக அரசியலில் குதிக்க இருப்பதை கோடிட்டுக் காட்டினார்.

விழாவுக்கு தலைமை தாங்கிய திரைப்பட தொழிலார்கள் சம்மேளன தலைவர் அமீர், பெப்சி சிவா, இயக்குனர்கள் சங்க பொருளாளர் எஸ்பி .ஜனநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திரையுலக பிரபலங்களும் படக்குழுவினரும் ‘தலைவன்’ பட இசை குறுந்தகடைவெளியிட ரசிகர்கள் பெற்றுக் கொண்டனர் .

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum