தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபுதேவா நடிக்கும் முதல் டான்ஸ் 3டி படம்.

Go down

பிரபுதேவா நடிக்கும் முதல் டான்ஸ் 3டி படம்.  Empty பிரபுதேவா நடிக்கும் முதல் டான்ஸ் 3டி படம்.

Post  ishwarya Mon May 27, 2013 5:34 pm

ஹாலிவுட்டில் வெளிவரும் நடனத்தை மையமாக கொண்ட படங்களைப்போல தானும் ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது பிரபு தேவாவின் நீண்ட நாள் கனவு. அது இப்போது 3டி படமாக நனவாகிறது. யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்டிதை ரெமோ டிசோசா இயக்குகிறார். அவரே நடனமும் அமைக்கிறார். பிரபு தேவாவுடன் பிரபல நடன கலைஞர்கள் கணேஷ் ஆச்சார்யா, சல்மான்கான், தர்மேஷ், பிரின்ஸ், மயூரேஷ், விருஷாலி, லாரன் கோட்லியம் ஆகியோரும் நடிக்கிறார்கள்., சச்சின், ஜிகார் இசை அமைக்கிறார்கள். விஜய்குமார் அரோரா ஒளிப்பதிவு செய்கிறார்.

கதைப்படி பிரபுதேவா மும்பையில் தன் நண்பருடன் இணைந்து சுவிஸ் டான்ஸ் அகாடமி என்ற நடனப் பயிற்சி பள்ளியை நடத்துகிறார். நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரபுதேவா நடனப் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகிறார். ஊருக்கு சென்று விவசாயம் செய்யலாம் என்ற எண்ணத்துடன் மும்பையில் இருந்து கிளம்பும் பிரபுதேவா கண்ணில் ஒரு சாதாரண நடனகுழு ஒன்று உள்ளூர் போட்டியில் கலந்து கொள்வதற்காக தயார் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறார். அற்புதமான திறமையுடன் உள்ள அந்த குழு சரியான வாய்ப்பின்றி இருப்பதை உணர்கிறார். அந்த நடனகுழுவின் மாஸ்டராகி உலகின் சிறந்த நடன குழுவாக அதனை எப்படி மாற்றுகிறார் என்பதுதான் கதை. இந்தியில் "ஏபிசிடி" (எனி படி கேன் டான்ஸ்) என்பது படத்தின் பெயர். தமிழில் "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்" என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum