தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடற் பொறியியற் கலைச் சொற்கள்

Go down

கடற் பொறியியற் கலைச் சொற்கள் Empty கடற் பொறியியற் கலைச் சொற்கள்

Post  oviya Mon May 27, 2013 5:11 pm

விலைரூ.150
ஆசிரியர் : ஆர். ராமசாமி
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பகுதி: கல்வி
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம்: 335
கப்பல், கடல், துறைமுகம் சார்ந்த பணியாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும், பயிற்சி நிலையங்களுக்கும் ஒரு பயனுள்ள நூல்; இதுவரை, இது போன்ற ஒரு முயற்சி எடுக்கப்பட்டதில்லை! சாதாரணமாக, ஒருபல்கலைக்கழகம் பெருங்குழு ஒன்றை அமைத்து, செய்ய வேண்டிய பணிகளை மூன்று பொறியியல் வல்லுனர்கள் செய்துள்ளனர் என்பது போற்றப்பட வேண்டிய விஷயம்.நூலைப் பொறுத்த வரையில், அகர வரிசைப் படுத்தப்பட்டு, அகராதி போல, அமைக்கப்பட்டுள்ளதால், மிக நன்றாகப் பயனளிக்கக் கூடியது.
இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள, 22 பக்க விளக்கப் படங்களும், சிறப்பாக உள்ளன. நூலுக்கு மதிப்பைச்சேர்க்கின்றன.மிகவும் சில சிறிய பிழைகளைத் தவிர உதாரணம்: Dead load dead weight அது கப்பலின் நீரில் இடங்கொள்ளும் அளவு அல்லது நீர்மத்தில் மூழ்கும்பொருள்கள், நீரில் இடங்கொள்ளும் அளவு என்று இருந்திருக்கலாம்.
அதே போல, deep tank என்பது, கப்பலின் அடித் தளத்திலிருந்து கீழ்த்தளத்திற்கும் மேல்இருக்கும்படி அமைக்கப்பட்ட, ஒரு தொட்டி என்று இருந்திருக்கலாம் பக்கம் 84, 85 davit தொலைநோக்கி என, குறிக்கப்பட்டுள்ளது. அது படகை ஏற்றவோ, இறக்கவோ பயன்படும் கருவி.இவை போலச் சிறு பிழைகள் தவிர்க்கப் பட்டிருக்கலாம். இவ்வளவு சிறந்த முயற்சியில் இவை மிகச் சிறியவையே.மொத்தத்தில், பாராட்டுக்குரிய முயற்சி. இப்போது, 31 கடல்சார் பயிற்சி நிலையங்கள், தமிழகத்தில் உள்ளன. அவற்றின் நூலகங்களில், இந்நூல் தவறாது வைக்கப்பட வேண்டியதாகும். அரசும், இந்நூலுக்கு பாட புத்தக அங்கீகாரம் அளிக்க வேண்டும். இத்துறைக்கு, இந்நூல் ஒரு சேர்மானம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum