தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாராவை பாரட்டிய அஜித்.

Go down

நயன்தாராவை பாரட்டிய அஜித். Empty நயன்தாராவை பாரட்டிய அஜித்.

Post  ishwarya Mon May 27, 2013 4:47 pm

பிரபுதேவாவுடனான பிரிவுக்கு பின்பு நடிக்கவந்துள்ள நயன்தாரா மீண்டும் அஜித்துடன் ஜோடி சேர்ந்து விட்டார். பெரும்பாலும் நடிகைகளைப் பொறுத்தவரை முதல் ரவுண்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேருவார்கள்.

ஆனால் இரண்டாவது இன்னிங்சில் அதுபோன்ற வாய்ப்புகள் அவர்களுக்கு எட்டாக்கனியாகி விடும். ஆனால் நயன்தாரா விடயத்தில் இது நேர்மாறாகி விட்டது. தற்போதும் முன்பு நடித்த அனைத்து நாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கும் நடிகர்களும் அவருடன் நடிக்கத் துடிக்கின்றனர். இதனால் வெளியில் சொல்ல முடியாத மகழ்ச்சியில் இருக்கிறார் நயன்தாரா.

மேலும், முதிர்ச்சியான நடிகர்களுடன் நடிக்க தன்னிடம் யாராவது கதை சொல்ல வந்தால் அந்த கதைகளை தவிர்க்காமல் கேட்டுவிட்டு, பின்னர் வேறு காரணங்களை சொல்லி தவிர்த்து விடுகிறார்.

அதேசமயம் இளம்நடிகர்களின் படங்கள் என்றால் கதையில் தனக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்றபோதும் பட வாய்ப்புகளை கைப்பற்றி விடுகிறார்.

பில்லா படத்தில் நடித்ததை விடவும், தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் ஜோடியாக நடித்து வரும் படத்தில் பன்மடங்கு சிறப்பாக நடித்திருக்கிறாராம்.

இதை அனுபவரீதியாக உணர்ந்த அஜித்தே, பல காட்சிகளில் நடித்தபோது நயன்தாராவை மனதார பாராட்டியிருக்கிறார் என்கிறது படவட்டாரம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum