தியானத்தை விடு ஞானத்தைப் பெறு
Page 1 of 1
தியானத்தை விடு ஞானத்தைப் பெறு
தியானத்தை விடு ஞானத்தைப் பெறு
விலைரூ.90
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: நர்மதா பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
Bookmarkபிடித்தவை
"நர்மதா 10, நானா தெரு, தியாகராயநகர், சென்னை-17. (பக்கம்: 216 )
மன அமைதிக்கும், உடல்நலத்திற்கும் தியானம் மிக அவசியம் என வலியுறுத்தப்படும் காலம் இது. "மெட்ரிக் பள்ளிகள் போல எங்கு பார்த்தாலும் தியானப் பயிற்சி மையங்கள் நடைபெறும் நேரம் இது. இத்தருணத்தில் இப்படி ஒரு நூலா என்று நம்மைத் திகைக்க வைக்கும் தலைப்பு. இந்த வினாவை நூலாசிரியரே எழுப்பி, நம்மை நடுநிலையுள்ளவர்களாக இருந்து நூலைப் படிக்குமாறு கேட்டுள்ளார். தியானம் பயிற்சிகளின் மூலம் பலருக்கும் வாய்க்கக்கூடியது. ஞானம் அப்படியன்று. உலகத்தில் ஞானம் பெற்றவர் என்று சிலரைத்தான் காட்ட முடியும். ஞானம் வந்தால் வேறென்ன வேண்டும்? ஆகவே,
ஞானத்தை அடைய ஒரு வகையில் தியானம் தடையாக உள்ளது என்கிறார் ஆசிரியர். தியானம் மனோலயம் என்றும், ஞானம் மனோநாசம் என்றும் வேறுபடுத்தி, ஞானமே மேலானது என நிலைநாட்ட முயன்றுள்ளார் ஆசிரியர்.முல்லா நசுருதீன் கதையிலிருந்து, கவுதம புத்தர் கதை வரையில் பலரது செய்திகளை தர்க்கவாதமாக வரைந்துள்ளார்.
இந்நூலில், "ஞானத்தை பொறுத்தவரையில் புரிந்து கொள்ளுவது மட்டுமே போதுமானது. அறிவு பூர்வமான தெளிவு மட்டுமே போதுமானது. நாம் விவரிக்கும் ஞானம் என்பது வெறும் அறிவு பூர்வமான நிலையே. வெறும் புத்திபூர்வமான நிலையே என்று இறுதி அத்தியாயம் நமக்கு சொல்கிறது. உங்களுக்குப் புரியவில்லையா? நூலை வாங்கி ஆர அமர்ந்து படித்துப் பாருங்கள். ஒரு கால் புரியலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தியானத்தை விடு ஞானத்தைப் பெறு
» தமிழ் விடு தூது
» போராடு! வெற்றி பெறு!
» மக்களிடம் வரவேற்பை பெறும் மூலிகைத் தைலம்!
» உயிரணுக்களை தானம் பெறும்போது
» தமிழ் விடு தூது
» போராடு! வெற்றி பெறு!
» மக்களிடம் வரவேற்பை பெறும் மூலிகைத் தைலம்!
» உயிரணுக்களை தானம் பெறும்போது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum