தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதிரா... புதையலா?

Go down

புதிரா... புதையலா? Empty புதிரா... புதையலா?

Post  oviya Sun May 26, 2013 5:53 pm

விலைரூ.60
ஆசிரியர் : நாகப்பன் - புகழேந்தி
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்: 978-81-8476-157-3
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை’. ஆகவே, நம் தேவைகளுக்குப் பொருள் ஈட்டத்தான் வேண்டும். சேமித்த பணம் நாம் தூங்கும்போதுகூட நமக்காக வட்டி ஈட்டவேண்டும் என்பது இப்போது பலருக்கும் விருப்பமான பொருளாதாரக் கொள்கை. அதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால், எதில் அதிகமாகப் பணம் ஈட்டமுடியும்?
அதிக ரிஸ்க் இருக்கும் வழிகளில் அதிகமாக வட்டி விகிதம் இருந்தாலும், போட்ட முதல் கொஞ்சம் தள்ளாடி கடைசியில் சராசரி வட்டி விகிதம்தான் வந்து சேரும். அதிகப் பாதுகாப்பைப் பார்த்தால் மூன்று வருடங்களுக்குப் பிறகு வரும் லாபமோ பணவீக்கத்தைவிடக் குறைவாக இருக்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் பங்கு மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்வதே சிறந்த வழி என்று தோன்றுகிறது.
பங்கு மார்க்கெட்டில் உள்ள ஒரு நுட்பம், ‘ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்’. இதில் பங்குகளின் மதிப்பு ஷேர் மார்க்கெட்டைப் போல் அல்லாது, குறைந்தாலும் லாபம் பார்க்க முடியும்.
ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் என்றால் என்ன, அதன் வகைகள் என்னென்ன என்ற அரிச்சுவடியிலிருந்து, அதன் உயர்ந்த நுணுக்கங்கள் வரை சாமானியரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் விவரித்திருக்கின்றனர், நூலாசிரியர்கள் நாகப்பன் _ புகழேந்தி.
இவற்றைவிட ‘விரைவாகப் பணம் சம்பாதித்துவிடலாமே’ என்று எங்கு பொதுவாக எல்லாருக்கும் ஆசை தோன்றுமோ அந்தந்த இடங்களில் ‘ஸ்பீட் ப்ரேக்கர்’ கொடுத்து, வாசகர்களை கவனமுடன் இருக்கச் செய்திருப்பதில் அவர்களுடைய பழுத்த அனுபவமும் தெரிகிறது; வாசகர்கள் மேலான அக்கறையும் புலனாகிறது. இருவர் உரையாடுவது போல் கட்டுரைகள் அமைந்திருப்பது எளிமையை அதிகரிக்கிறது.
நாணயம் விகடன் இதழில் வெளியான தொடர் கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூலைப் படித்தால், ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸைப் பற்றிய பயம் விலகி, அதில் தைரியமாக ஈடுபட முழு நம்பிக்கை பிறக்கும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum