ராதாகிருஷ்ணன் பேருரைகள் தொகுதி 1
Page 1 of 1
ராதாகிருஷ்ணன் பேருரைகள் தொகுதி 1
ஆசிரியர் : கா.திரவியம்
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
25, பீட்டர்சு சாலை, சென்னை -14,
பக்கம்: தொகுதி ஒன்று 626,
முன்னாள் குடியரசுத் தலைவர் தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன், குடியரசின் துணைத் தலைவராய் உலகில் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலும் நிகழ்த்திய ஆங்கிலப் பேருரைகளை, 1952 முதல் 1956 முடிய முதல் தொகுதியாக, மூலத்திற்கு இணையாக தமிழாக்கம் செய்யப்பட்டு தற்போது இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
உலக அரங்கில் இந்தியா கலை, கல்வி, கலாசாரம், சமயமும், தத்துவமும் பன்மணிக்கோவை என்னும் தலைப்புகளில், முதல் தொகுதியில் 103 பேருரைகளும், தொகுக்கப்பட்டுள்ளன.
கடந்த 1954, நவ.,17ல் அமெரிக்கா செனட்டுக்கு, இந்திய பார்லிமென்ட் மேல்சபை சார்பில் தந்தத்தால் ஆன சுத்தி ஒன்றை அன்பளிப்பாகத் தந்து, "பாமர மக்கள் பிறக்கும்போதே முதுகில் சேனம் தாங்கிப் பிறக்கவுமில்லை, அதிர்ஷ்டம் படைத்த சிலர், மற்றவர்கள் முதுகில் ஏறி, ஒய்யாரமாயும் உல்லாசமாயும் சவாரி செய்ய வேண்டுமென்றும் ஆண்டவன் விதிக்கவில்லை (பக்கம் 23) என்ற ஜெப்பர்சன் கருத்தைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
"நாம் உலகத்தைப் போரில் ஆழ்த்தினால், பொறுப்புள்ள தலைவர்கள் என்று நம்மை வருங்கால வரலாறு மதிக்காது. சித்தம் தடுமாறிய பித்தர்கள் என்று தான் நம்மைச் சித்திரிக்கும் (பக்கம்: 45). "பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் (டில்லி) நான் அளிக்கும் முதல்பட்டம், என் அருமை நண்பர் ராஜகோபாலச்சாரியாருக்கு என்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி, (பக்கம்: 122)
"நாம் எந்த உண்மையை ஏற்றுக் கொள்வதென்றாலும் அதற்குப் பகுத்தறிவுக்கேற்ற நியாயமும், ஆதாரமும் காட்ட வேண்டும். இல்லாவிடில் நம் சமய நம்பிக்கைகள் வெறும் பொறுப்பற்ற ஆசையாகிவிடும், (பக்கம்: 336)
"சுயராஜ்யம் பெற்றபின் நான் அரசியலிலிருந்து விலகி, கணிதப் பேராசிரியர் பணியை ஏற்பேன். எனக்கு அரசியல் என்றாலே வெறுப்பு என்ற (பக்கம்:606) திலகரின் பதில், அவரின் ஈடுபாடு எதில் இருந்தது என்பதைக் காட்டியது,
"உலகை அழிக்கும் பலாத்காரத்தைக் கையாள்வதா, உலகைக் காக்கும் அஹிம்சையைப் பின்பற்றுவதா என்று நாம் ஒவ்வொருவரும் ஒரு தேர்ந்த, தெளிந்த முடிவுக்கு வரவேண்டும்,
டாக்டர் ராதாகிருஷ்ணன் பேருரைகள் அன்பின் ஊற்று; அறிவுக்கேணி; ஆன்மீகக் களஞ்சியம் அந்த ஊற்று நீரைப் பருகுவது பண்பட்ட வாழ்வு வாழப் பயிற்சியும் பக்குவமும் ஊட்டுவதாகும், என்று முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது சத்திய வாக்காகும்.
இப்பேருரைகளில் ஒன்றிரண்டையாவது மாணவர்கள் பாடத்திட்டத்தில் சேர்த்தால் சமூகம் பண்படும், பயன்பெறும். அரசும், கல்வியாளர்களும் கவனத்தில் கொள்வார்களா என்பதைக் காலம் தான் கூறவேண்டும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» ராதாகிருஷ்ணன் பேருரைகள் தொகுதி 1
» டாக்டர் ராதாகிருஷ்ணன்
» மாருதி பேருரைகள்
» கீதைப் பேருரைகள்
» கீதைப் பேருரைகள்
» டாக்டர் ராதாகிருஷ்ணன்
» மாருதி பேருரைகள்
» கீதைப் பேருரைகள்
» கீதைப் பேருரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum