தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுக்கிரன்

Go down

சுக்கிரன்                                            Empty சுக்கிரன்

Post  birundha Sun May 26, 2013 4:13 pm


பிருகு மகரிஷியின் புதல்வனாக அவதரித்தவர் பார்கவன். அவருக்கு சுக்கிரன் என்ற பெயரும் உண்டு. அசுரர்களுக்கு குருவாக விளங்கிய சுக்கிரன் காசிக்குச் சென்று ஒரு லிங்க பிரதிஷ்டை செய்து பல ஆண்டு காலம் கடுமையான தவம் செய்தார். அவர் முன்னே பரமசிவன் தோன்றி, அவர் தவத்தை மெச்சி, இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ம்ருத சஞ்ஜீவினி என்ற மந்திரத்தை உபதேசித்தார்.

இவரது சக்தியை அறிந்த அசுரர்கள் சுக்கிரனைத் தங்கள் குல குருவாக ஏற்றுக் கொண்டார்கள். தேவர்களுக்கும் இவர்களுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கும். அசுரர்கள் இறந்து விட்டால் மருத சஞ்ஜீவினி மந்திரத்தைப் பிரயோகித்து உயிர்ப்பிக்கச் செய்து விடுவார் சுக்கிரன். தேவர்களுக்கும் குருவாரிய பிருஹஸ்பதிக்கும் இந்த வித்தை தெரியாததாகையால் தன் மகன் கசன் என்பவனை சுக்கிரனிடம் அனுப்பி ம்ருத சஞ்ஜீவினி மந்திரத்தைக் கற்று வர அனுப்பினார்.

அதோடு இன்னும் கதைகளும் பல உண்டு. இவை ஒரு காலத்தில் சினிமாப் படமாகவே வெளிவந்தது. சுக்கிரனுக்கு நான்கு குமாரர்களும், தேவயானை, சுரசை என்று இரண்டு குமாரிகளுமுண்டு. இவர் வெண்மையான நிறமுடையவர்.

அதனால் இவருக்கு வெள்ளி என்றும் பெயர் உண்டு. மகாபலிச் சக்கரவர்த்தியிடம் திருமால் வாமனராக வந்து மூன்றடி மண் கேட்டபோது, சுக்கிராச்சாரியார் அவ்வாறு மூன்றடி மண் கொடுக்க வேண்டாம் எனத் தடுக்க, மகாபலி அதைக் கேளாமல் நீர் வார்த்துக் கொடுக்க முனைந்த போது நீர்வார்க்கும் கெண்டியின் மூக்கினுள் சுக்கிரர் வண்டாக உருவெடுத்து நீர்வராமல் அடைத்துக் கொள்ள, அது கண்ட மகாபலி தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்குள் செருக, அது சுக்கிரனின ஒரு கண்ணில் குத்த, அதனால் சுக்கிரர் ஒரு கண் இழந்தவரானார்.

நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் ஒரு தனிச்சிறப்பு இடத்தைப் பெறுகிறார். சுக்கிரனைப் போல் கொடுப்பவனே இல்லை என்று கூறுவர். உலகமே போற்றும் சுக்கிரன் வாழ்க்கையோ சோதனைகள் நிறைந்தவை. சுக்கிரன் வாழ்க்கை எப்படியிருந்தாலும் நவக்கிரகங்களில் அவர் யோகக்காரர் என்று புகழப்படுகிறார். சுக்கிரதசை இருபது ஆண்டுகள், அந்தக் காலத்தில் அவர் ஒருவனை கோடீஸ்வரனாகவும் ஆக்கி விடுவார்.

உலகப் புகழ் பெறவும் செய்வார். ஜாதகத்தில் சுக்கிரன் கொடூரமானவராக இருந்தால் அவரை பூஜிப்பதன் மூலம் சாந்தமடைவார். கெட்டவராக இருந்தால் அவரைப் பூஜிப்பதால் மேலும் நல்ல பலன்களைத் தருவார். சுக்கிர பகவான் அழகானவர்; கலாரசிகர். சகலகலாவல்லவர். மாபெரும் கவிஞர், சுக்ர நீதி என்ற நீதிபதி சாஸ்திரம் எழுதியவர். மழைக்கு அதிகாரியாக இருப்பவர்.

இவருக்குச் சுபகீர்த்தி, சூகரி, கிருங்கினி என்பவர்கள் மனைவிமார்கள் என்றும், விஷகடிகன் என்பவன் புத்திரன் என்றும், தேவயானி என்பவள் புத்திரி என்றும், சொல்லப்படுகிறது. ராஜராஜேஸ்வரியைப் பூசித்து வருவதாலும் வைரக் கல்லைத் தரித்துக் கொள்வதாலும், வெள்ளைநிற வஸ்திரத்தையும் வெள்ளியையும் மொச்சை தானியத்தையும் தானம் கொடுப்பதாலும், சுக்ர வார விரதம் இருப்பதாலும் சுக்கிர கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.

ஒரு ராசியில் ஒரு மாதம் தங்குகிறார். ஓர் ஆண்டில் ராசி சக்கரத்தை வலம் வருகிறார். 3, 6, 8, 12 இல்லங்களில் சுக்கிரன் வந்தால் வேதையாகும்.

பூஜை முறை....

வெள்ளிக்கிழமை குளித்து வீட்டைச் சுத்தம் செய்து பூஜைக்குத் தயாராக வேண்டும். வெண்ணைய் கலந்து சாதம், இனிப்புப் பட்சணங்கள், பலகாரங்கள் ஆகியவற்றை வெண்தாமரை இலையில் படைக்கவும். தேங்காய் பழம், வெற்றிலை, பாக்கு வைக்கவும், வெண்தாமரை மலர் கொண்டு பூஜிக்கவும்.

நவக்கிரகப்படம் அல்லது சுக்கிரன் படம் அல்லது மகாலட்சுமியின் படத்தை வைத்துப் பூஜை செய்யவும். சுக்கிர பகவான் பெண் கிரகமாகக் கருதப்படுகிறார். அவர் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களுக்கு அஷ்ட லட்சுமிகளின் அருளைத் தருவார். உல்லாசத்தையும் சரச சல்லாபத்தையும் கொடுப்பார். கேந்திரங்களில் அமர்ந்தால் பல தோஷங்களை நீக்குவார். வியாபாரத்தைப் பெருக்குவார்.

அவர் `களத்திரகாரகன்' என்று குறிப்பிடப்படுகிறார். அவர் மூலமாக கணவனைப் பற்றியும், மனைவியைப் பற்றியும், அவர்களிடையே நிலவும் உறவைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். அவர் செல்வாக்கு, ஆடை, அணிகலன்கள், வண்டி, வாகனம், நிதி, சுகம், காமம், சயன சுகம், வீடு, இசை, நாட்டியம், கவிதை, நாடகம், பாடல்கள், வாசனைப் பொருள்கள் போன்றவற்றைத் தருவார்.

சுக்கிரனால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறவர்கள் அழகாகவும், அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களாகவும், சுறுசுறுப்பாகச் செயல்படுபவர்களாகவும், கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவராகவும் இருப்பார்கள். மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் கண்களைப் பெற்றிருப்பார்கள். அன்பு, இரக்கம் போன்றவற்றைப் பெற்ற இவர்கள், மனப்பூர்வமாக மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.

ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டால் அதைச் செய்து முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். இவர்களுக்கு மனைவி மூலமாக அதிர்ஷ்டம் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்குக் குறைவிருக்காது. தெய்வீகப் பணிகளில் சிறப்பாகச் செயலாற்றுவார்கள். பல அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள். இவர்களுக்கு நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ளும்.

ரத்தம் ஓட்டக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பரணி, பூசம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்களுக்குச் சுக்கிர தசையே ஆரம்பமாக இருக்கும். பன்னிரு லக்னங்களில் மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னத்தாருக்கு சுக்கிரன் ஆதிபத்ய அடிப்படையில் யோகமளிக்க வல்லவனாகிறான்.

அதனால் இந்த லக்னத்தாருக்கு நீசமோ, பகையோ பெறாது சுப ஸ்தானங்களில் நின்று தசை நடைமுறைக்கு வர வேண்டும். யோகப் பலன்கன் நடக்கும். நல்ல ஸ்தானங்களில் இல்லையெனில் தசையில் நற்பலன்கள் நடக்காது போய்விடும். மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் போன்ற லக்னத்தில் பிறந்தவருக்கு சுக்கிரன் சுப ஸ்தானங்களில் வீற்றிருந்தாலும் நற்பலன்கள் நடக்காது.

ஆடம்பரமாகவும் பிறர் பார்த்து வியக்கும் நிலையிலும் வீடு சொத்து சேர்க்கையுடன் வாகன யோகமும் பெற்றுத் திகழ்வர். திருமணமாகாதவர்களுக்கும் திருமணம் நடக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்த வண்ணமிருக்கும். புத்திர பாக்கியங்களிலும் குறையின்றி இருக்கும்.

உற்றார், உறவினர், சமூகத்தினர் போற்றிப் புகழ்வர். அவ்வாறின்றி சுக்கிரன் நீசம் பெற்றோ, மறைவு ஸ்தானங்களில் இருந்தோ தசை நடைமுறைக்கு வருமானால் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் திடீரென்று சரிந்து கீழ்நிலை அடைய நேரும். சுபக்கிரகமான சுக்கிரனும் கேந்திராதி பத்ய தோஷத்திற்கு ஆளானவன்.

அதனால் இவன் ஒரு லக்னத்தாருக்கு கேந்திர ஸ்தான ஆதிபத்யம் பெற்று கேந்திர ஸ்தானத்திலேயே நின்று தசை நடத்தினால் நற்பலன்கள் நடக்காது. அதைப்போன்று சுக்கிரன் எந்த ஆதிபத்யம் பெற்றவனாக இருந்தாலும் அல்லது ஒரு லக்னத்தாருக்கு சுபனாகவோ அசுபனாகவோ இருந்தாலும் அவன் லக்னத்திற்கு ஆறாமிடத்தில் நின்றிருப்பது நல்லதன்று சுக்கிரன் கோட்சார ரீதியாய் ஜென்ம ராசிக்கு 1,5,8,9,11,12ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் நற்பலன்களையும் ஏனைய இடங்களில் மாறான பலன்களையும் அளிக்கும்.

சுக்கிரன் மாக்கோள் ஒவ்வொரு ராசியையும் கடக்க ஒரு மாதமாகும். அதனால் இதன் மாற்றத்தை பற்றி அறிய மக்கள் பெருமளவு கவனம் செலுத்த மாட்டார்கள். சுக்கிர தசை நடை முறையில் இருக்கும் காலங்களில் அதனால் தீய பலன்கள் நடக்காமல் இருக்க அதிதேவதையான மகாலட்சுமியை பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டு வருவது நன்மை அளிக்கும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum