வெற்றித் திருநாளே விஜயதசமி
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
வெற்றித் திருநாளே விஜயதசமி
நவராத்திரி விரதம் முடிவடைந்த மறுநாள் (பத்தாம் நாள்) தசமி திதியில் அமைவது விஜயதசமி தினமாகும். இந்த தசமியையும் சேர்த்துத்தான் வடஇந்தியப்பகுதிகளில் பத்து நாட்களுக்கு தசரா விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பஞ்ச பாண்டவர்களின் வனவாச காலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள், வில், அம்பு முதலான போர்க் கருவிகளை, வனவாசம் முடிவடைந்ததும் விஜயன் (அர்ச்சுனன்) எடுத்துப் போரிட்டு வென்ற நாளே விஜயதசமி என்பதாகப் பூர்வ நூல்கள் கூறுகின்றன.
இந்தியாவின் வடமாநிலங்களில் நவராத்திரி நாட்களில் இராம - இராவண யுத்தம் நடந்ததாகக் கருதுகின்றனர். நவராத்திரி தொடங்கியதிலிருந்து பத்தாவது நாளான தசமி திதியே இராவணனைக் கொன்று ராமபிரான் வெற்றிகொண்ட நாள் என்பதால் அந்த விஜயதசமியும் சேர்ந்து பத்து நாட்கள் அவர்களுக்கு தசரா விழாக்காலமாகிவிடுகிறது.
கொடிய அசுரர்களான சும்பன், நிசும்பன் ஆகியவர்களையும், அவர்களைச் சேர்ந்த மகிஷாசுரன், தும்பிரலோசன், சண்டன், முண்டன், ரக்தபீஜன் முதலானோரையும் அழிப்பதற்காக மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் சேர்ந்து தங்களின் சக்தியைப் பிரயோகித்து ஒரு சக்தி தேவியை உருவாக்கினார்கள்.
துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவிகளின் அம்சங்களும் ஒருங்கே சேரப்பெற்ற அந்த மகாசக்தி தன்னுடைய பத்துக் கரங்களிலும் தேவர்களின் ஆயுதங்களை எல்லாம் தாங்கி, இமவான் தந்த சிம்ம வாகனத்திலேறிச் சென்று அசுரர்களை அழித்துத் துவம்சம் செய்தாள். நவராத்திரிகளுக்குள் அனைத்து அசுரர்களையும் அழித்து ஜெயித்தபின், பத்தாவது நாளான விஜயதசமியில் அந்த வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தாள் எனப் புராணங்கள் விவரிக்கின்றன.
விஜயதசமியில் பலருக்கு அநேக வெற்றி வாய்ப்புகள் கிட்டியதாக மேலும் பல புராணக் கதைகளும் உள்ளன. வெவ்வேறு யுகங்களில் பல்வேறு காலங்களில் விஜயதசமி வெற்றித் திருநாளாக விளங்கி வருகிறது! ஜோதிட சாஸ்திரப்படியும் அட்டமி, நவமி தொட்டது துலங்காது என்று கூறப்படும். இவற்றிற்கு அடுத்ததாக வரும் தசமி திதியே புதிய வேலைகளைத் தொடங்கவும் சுபகாரியங்களை நடத்தவும் உகந்த திதியாகும்.
ஆகவே தான், சரஸ்வதி பூஜை (ஆயுத பூஜை) தினத்தில் பூஜையில் வைக்கப்படுகிற புத்தகங்கள், எழுதுகோல்கள், இதர கல்வி உபகரணங்கள், ஆயுதங்கள், விவசாய சாதனங்கள், தொழில்துறைக் கருவிகள் ஆகியவற்றை அப்போதே எடுத்து உபயோகப்படுத்தாமல், சரஸ்வதி பூஜை முடிவடைந்த மறுநாள் விஜயதசமி தினத்தில் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்குவது நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, புதிய கல்விகளையும் பயிற்சிகளையும் தொடங்குவது ஆகியவற்றிற்கும் விஜயதசமி மிகவும் உகந்த நாளாகும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» வெற்றித் திருநாளே விஜயதசமி
» விஜயதசமி
» தங்க மழை தரும் விஜயதசமி பூஜை!
» தங்க மழை தரும் விஜயதசமி பூஜை!
» விஜயதசமி
» விஜயதசமி
» தங்க மழை தரும் விஜயதசமி பூஜை!
» தங்க மழை தரும் விஜயதசமி பூஜை!
» விஜயதசமி
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum