ஆயுத பூஜை நடத்துவது எப்படி?
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
ஆயுத பூஜை நடத்துவது எப்படி?
உலகை இயக்கி வரும் மூம்மூர்த்திகளின் மனைவியரான கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகியோரை ஒருங்கே வழிபடும் திருநாட்கள் தான் நவராத்திரி. இது பொதுவான விழா என்றாலும் பெண்கள் பிரத்யேகமாக பங்கு கொண்டு கொண்டாடும் விழா. வீட்டில் கொலுவைத்து அக்கம் பக்கத்தாரை அழைத்து பூஜை செய்து பக்தி கதைகளை சொல்லி பலகார பிரசாதங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் புண்ணிய திருநாள்.
எருமை தலையை கொண்ட மகிஷாசுரன் என்னும் அசுரன் கடும் தவம் இருந்து இறைவனிடம் அரிய பெரிய வரங்களை பெற்றான். அதன்பின் அவன் மானிடர்கள் மட்டுமின்றி தேவர்களையும் இம்சை படுத்தினான். வரம் கொடுத்தவர்களாலேயே அவனை அழிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அம்பிகையை தேவர்கள் நாடினர்.
அம்பிகை அவனை வதம் செய்தாள். அதனால் அவளுக்கு மகிஷாவர்த்தினி என்று பெயர் வந்தது. மகிஷாசுரனை கொன்ற நாளை நவராத்திரியாக கொண்டாடுவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நடத்தப்படும்.
இந்த ஆண்டு இந்த மாதம் (அக்டோபர்) 16-தேதி (செவ்வாய்க்கிழமை) நவராத்திரி பூஜை தொடங்ëகுகிறது. அக்டோபர் 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சரஸ்வதி பூஜை (ஆயுத பூஜை) கொண்டாடப்படுகிறது. மறுநாள் புதன்கிழமை விஜயதசமி.
3 குணங்கள்.......
நவராத்திரி விழாவை அலங்கரிக்கும் கொலு, 9 படிகளைக் கொண்டதாக இருக்கும். கீழேயுள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை தாமச குணத்தை குறிக்கும். அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், அரசி, மந்திரி, வேலையாட்கள் போன்ற உருவங்கள் ரஜோ குணத்தை குறிக்கும். மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்வ குணத்தை அடையும் வழியை நமக்கு உணர்த்துகின்றன.
என்ன கலரில் புடவைகட்டுவது..........
நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட வண்ணத்தில் உடை அணிய வேண்டும். அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும். இதற்கென்று ஐதீகம் இல்லா விட்டாலும் கூட முதல் மூன்று நாட்கள் சிவப்பு, அடுத்த 3 நாட்கள் மஞ்சள் நிறைவான 3 நாட்களில் பச்சை நிற உடை அணியலாம். வசதி உள்ள பெண்கள் நவராத்திரி 9 நாட்களும் அன்றைய சக்தி யின் ஆற்றலுக்கு ஏற்ப புடவை நிறத்தை தேர்வு செய்து அணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். அதன்படி 9 நாட்களும் பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:-
16-ந்தேதி பச்சை ,17-ந்தேதி மஞ்சன்,18-ந்தேதி நீலம்,19-ந்தேதி கரு நீலம்,20-ந்தேதி சிவப்பு,21-ந்தேதி கிளிப்பச்சை,22-ந்தேதி இளஞ் சிவப்பு,23-ந்தேதி பச்சை/அரக்கு பார்டர் ,24-ந்தேதி வெங்காய கலர்.
வாழை வெட்டு...........
விஜயதசமி தினத்தன்று வாழை மரத்துடன் வன்னி மரத்தை வைத்து வெட்டுவது கோவில்களில் நடை முறையில் உள்ளது. இதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. அசுரனை அழிக்க 9 நாட்களும் கடும் போர் புரிந்த போதும் தேவிக்கு வெற்றி கிடைக்க வில்லை. இதனால் அவள் விஜயதசமி தினத்தன்று சிவனை வணங்கி போர் தொடங்கினாள்.
அப்போது அசுரன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தோடு சேர்த்து அசுரனை சம்ஹாரம் செய்தாள். இதை நினைவுப்படுத்துவே கோவில்களில் வாழை வெட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கு கண்ணி வாழை வெட்டு என்ற பெயரும் உண்டு.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம்
» ஆயுத பூஜை நடத்துவது எப்படி?
» விஜயதசமியில் பூஜை நடத்துவது எப்போது?
» ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி? யாரைப் பூசிப்பது?
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம்
» ஆயுத பூஜை நடத்துவது எப்படி?
» விஜயதசமியில் பூஜை நடத்துவது எப்போது?
» ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி? யாரைப் பூசிப்பது?
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum