தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொங்கலுக்கு வரும் 'ஜில்லா'!

Go down

பொங்கலுக்கு வரும் 'ஜில்லா'!  Empty பொங்கலுக்கு வரும் 'ஜில்லா'!

Post  ishwarya Sat May 25, 2013 1:09 pm

தலைவா' படத்திற்கு விஜய் நடிக்க இருக்கும் படம் 'ஜில்லா'. விஜய்யுடன் மோகன்லால், காஜல் அகர்வால், மஹத், தம்பி ராமையா, சூரி என்று பலரும் நடிக்க இருக்கிறார்கள்.

இமான் இசையமைக்க, நேசன் என்ற புதுமுக இயக்குனர் இயக்க இருக்கிறார். ஆர்.பி.செளத்ரி தயாரிக்க இருக்கிறார். 25 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 85வது படம் இது.

'ஜில்லா' படத்தின் பூஜை சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. விஜய், ஜீவா, தம்பி ராமையா, பூர்ணிமா பாக்யராஜ், மஹத், இயக்குனர் நேசன், இசையமைப்பாளர் இமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பட பூஜை நிறைவடைந்த பின்பு நிருபர்களிடம் பேசிய விஜய் " 'ஜில்லா' படத்தில் கதை தான் ஸ்பெஷல். 'ஜில்லா' படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தின் கதையை கேட்ட பின்பு எனக்கு மோகன்லால் போனில் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.

எனது திரையுலக வாழ்வில் முக்கிய படங்கள் அனைத்தையும் தயாரித்தது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தான். மீண்டும் அந்நிறுவன தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது." என்று தெரிவித்தார்.

இயக்குனர் நேசன், " 'ஜில்லா' படத்தின் கதை மதுரையில் நடைபெறுவது போன்று அமைத்து இருக்கிறோம். ஒரு கூட்டத்தில் தலைவனை ஜில்லா வந்துட்டானா என்று தான் அழைப்பார்கள். ஆகவே தான் படத்திற்கு 'ஜில்லா' என்று பெயரிட்டு இருக்கிறோம் " என்று கூறினார்.

ஜில்லா படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் துவங்கி தொடர்ச்சியாக நடைபெற இருக்கிறது. படத்தினை பொங்கல் 2013 அன்று வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum