சித்தர்கள் சொல்லும் திராவிட ஆன்மிகம்
Page 1 of 1
சித்தர்கள் சொல்லும் திராவிட ஆன்மிகம்
சித்தர்கள் சொல்லும் திராவிட ஆன்மிகம்
விலைரூ.80
ஆசிரியர் : கலைஅரசு
வெளியீடு: அருண் பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
Bookmarkபிடித்தவை
அருண் பதிப்பகம், 2/4, லட்சுமி நகர், கோவை புதூர், கோயம்புத்தூர்-641 042. (பக்கம்: 184).
சித்தர்கள் பற்றியும் அவர்கள் செய்த அற்புதங்கள் பற்றியும் அதீத கற்பனைகளுடன் ஆன்மிக ஏடுகளில் எழுதப்படும் கட்டுரைகளைப் படித்து எரிச்சல் அடைந்து, அவற்றைக் கண்டிக்கும் நோக்கில், சித்தர்கள் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து எழுதி, இந்த நூலை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிடுகின்றார் நூலாசிரியர். சித்தர்கள் யார்? சித்தர்கள் சொல்லும் பூஜா விதி, சிவ வாக்கியரின் வேத மறுப்பும், வேதியர் எதிர்ப்பும் போன்ற 18 தலைப்புகளில் தமது ஆய்வுக் கருத்துகளை மிகுந்த காரசாரமாக எழுதியுள்ளார். சித்தர்கள் அஷ்டமாசித்தி பெற்றவர்கள், ஆகாயத்தில் பறப்பர், நீர் மேல் நடப்பர், அற்புதங்கள் செய்தனர் என்பதெல்லாம் நம்பத் தகாதவை, கற்பனைச் செய்திகள் என்கிறார். சித்தர்கள் ஒருவரும் பிராமணரல்ல திராவிடர்களே. வேத எதிர்ப்பும் பிராமண ஆதிக்க எதிர்ப்புமே இவர்களின் குறிக்கோள் என்கிறார். நூல் முழுக்க இக்கருத்துக்களே விரவிக் கிடக்கின்றன.சித்தர்களைப் பெருமைப்படுத்தும் நோக்கிலான ஆய்வில் இவர் அழுத்தந் திருத்தமாகக் கூறும் ஒரு கருத்து, "சித்தர்களுக்கு மூளையின் செயற்பாடுகள் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை' என்பதாக உள்ளது. சிதாகாச' வர்ணிப்பும், "இரு புருவ மத்தியின் உட்புறம்' என்பதும் வேறு எதைக்குறிப்பதாக இவர் எண்ணுகிறாரோ தெரியவில்லை. பஞ்ச பூதக் கொள்கையும் தவறென விமர்சிக்கிறார். சமூகச் சீர்கேடுகளையும் வெற்றுச் சடங்குகளையும் சாடியவர்கள் என்றபோதும், சித்தர்கள் இறை நம்பிக்கையை மறுத்தவர்கள் அல்ல. விடுகதைகள், விக்கிரமாதித்தன் குட்டிக்கதைகள், என்.எஸ்.கே., டி.ஏ.மதுரம் காமெடி என்று பல்சுவை கலந்த நையாண்டி நடையில் சுவாரஸ்யமாக எழுதப்பட்ட நூல் என்றாலும், சித்தர்கள் பற்றிய குழப்பமான சிந்தனையே விஞ்சி நிற்கிறது.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சித்தர்கள் சொல்லும் திராவிட ஆன்மிகம்
» திராவிட காவியம்
» திராவிட நாட்டுக்கதைகள்
» திராவிட இயக்கம் 100 ஆண்டுகள்
» திராவிட நாட்டுக் கதைகள்
» திராவிட காவியம்
» திராவிட நாட்டுக்கதைகள்
» திராவிட இயக்கம் 100 ஆண்டுகள்
» திராவிட நாட்டுக் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum