தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரீ-மேக்காகும் முத்துராமனின் காசேதான் கடவுளடா...!

Go down

ரீ-மேக்காகும் முத்துராமனின் காசேதான் கடவுளடா...! Empty ரீ-மேக்காகும் முத்துராமனின் காசேதான் கடவுளடா...!

Post  ishwarya Sat May 25, 2013 12:04 pm

1970-களில் சூப்பர் - டூப்பர் ஹிட்டான காசேதான் கடவுளடா படத்தை இப்போது ரீ-மேக் செய்வதற்கான வேலைகள் நடக்கிறது. ஏ.வி.எம். தயாரிப்பில், சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, லட்சுமி, மனோரமா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் காசேதான் கடவுளடா. முழுக்க முழுக்க காமெடி படமான இப்படத்தில் தேங்காய் சீனிவாசனின் சாமியார் வேடம், அனைவராலும் பாராட்டப்பட்டது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோரது படங்கள் வெளியான நேரத்தில் சிறிய நடிகர்களுடன், காமெடியாக எடுக்கப்பட்ட இப்படம் சூப்பர் ஹிட்டானதுடன் நல்ல வசூலையும் பெற்று தந்தது.

இந்நிலையில் இப்படத்தை இப்போது ரீ-மேக் செய்ய உள்ளனர். இதற்கான உரிமையை விஸ்வாஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. ஒன்பதுல குரு படத்தை இயக்கிய பிடி.செல்வகுமார் இப்படத்தை இயக்க உள்ளார். தற்போது இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர்-நடிகையர் தேர்வு நடக்கிறது. சந்தானம் அல்லது வடிவேலு ஆகியோரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் இப்படம் பற்றிய முழு அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum