தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜித்தின் பிறந்தநாள் பரிசு...?

Go down

அஜித்தின் பிறந்தநாள் பரிசு...? Empty அஜித்தின் பிறந்தநாள் பரிசு...?

Post  ishwarya Fri May 24, 2013 5:49 pm

அஜித்தின் பிறந்தநாளான மே 1 விஷ்ணுவர்தன் அஜித்தை வைத்து இயக்கியிருக்கும் படம் வெளியாகும் என அஜித் ரசிகர்கள், படத்தை தொடங்கிய போது நம்பினர். பிறகு இசை வெளியீட்டு விழாவாவது அன்றைய தேதியில் நடக்கும் என நினைத்தனர். அட, பர்ஸ்ட் லுக்கையாவது வெளியிடுவார்களா என்ற அளவுக்கு நிலைமை இப்போது கீழிறங்கியிருக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கைக்கூட இதுவரை விஷ்ணுவர்தன் வெளியிடவில்லை. மே 1 அஜித்தின் பிறந்தநாள் அன்று படத்தின் பெயரை அறிவித்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கை இன்றும் ரசிகர்களிடையே உள்ளது.

இந்நிலையில் ட்ரெய்லர் ஒன்றை - படத்தின் பெயரை குறிப்பிடாமல் அஜித் 53 என்ற பெயரில் உருவாக்கியிருக்கிறார்கள். விஷ்ணுவர்தன் படம் அஜித்தின் 53 வது படம். ட்ரெய்லரை பார்க்கக் கிடைத்த பாக்கியசாலிகளான யுவன் ஷங்கர் ராஜாவும், விஷ்ணுவர்தனின் தம்பியும் நடிகருமான கிருஷ்ணாவும் ட்ரெய்லர் சூப்பர் என்று தங்களது சமூக இணையதளத்தில் தெரிவித்து, ட்ரெய்லரை பார்க்காதவர்களின் பொறாமையை சம்பாதித்திருக்கிறார்கள். இந்த ட்ரெய்லரை மே 1 வெளியிடுவார்கள், பார்க்கலாம் என்ற பரவசத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum