தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கணவரை தேடி அலையும் காட்சி: நயன்தாராவை ரசிகர்கள் முற்றுகை.

Go down

கணவரை தேடி அலையும் காட்சி: நயன்தாராவை ரசிகர்கள் முற்றுகை. Empty கணவரை தேடி அலையும் காட்சி: நயன்தாராவை ரசிகர்கள் முற்றுகை.

Post  ishwarya Fri May 24, 2013 5:37 pm

கணவரை தேடி கர்ப்பிணி கோலத்தில் ஐதராபாத் வீதிகளில் நயன்தாரா அலையும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் ‘கஹானி. இப்படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. கர்ப்பிணி பெண் ஒருவர் கணவரை தேடி வீதி வீதியாக அலையும் கதாபாத்திரம். இப்படம் கொல்கத்தாவில் படமானபோது வித்யாபாலன் நடித்த காட்சிகள் ஜனநடமாட்டம் மிகுந்த பகுதியில் தத்ரூபமாக படமாக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது.

இதே காட்சிகளில் தற்போது நயன்தாரா நடிக்கிறார். இதற்காக தலைவிரி கோலத்தில் கர்ப்பிணிபோல் வேடம் அணிகிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. சேகர் கம்முலா இயக்குகிறார். இதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. கதாபாத்திரத்தின் தன்மையையும் சற்று மாற்றத்துடன் இதில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நயன்தாரா நடித்த காட்சிகள் நேற்று ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. பெரும்பாலான காட்சிகள் செட் போட்டு படமாக்கினாலும் சில காட்சிகளை ஐதராபாத் சாலைகளில் படமாக்கினர். அப்போது ரசிகர்கள் நயன்தாராவை சூழ்ந்துகொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. யூனிட்டார் கூட்டத்தை கலைத்த பின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதியில் ஸ்ருதி; ரசிகர்கள் முற்றுகை!
» வேலாயுதம் பட தியேட்டர் முற்றுகை! ரசிகர்கள் ஓட்டம்!!
» வேலாயுதம் பட தியேட்டர் முற்றுகை! ரசிகர்கள் ஓட்டம்!!
» திருப்பதி கோவிலில் ஸ்ரேயா, ரிச்சா சாமி கும்பிட்டனர்: ரசிகர்கள் முற்றுகை
» தேவி தியேட்டரில் விஜய் ரசிகர்கள் முற்றுகை வேலாயுதம் படத்தை திரையிட கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum