நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பணி
Page 1 of 1

சிவில் நீதிபதிகள் தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியிடம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 185 சிவில் நீதிபதிகளின் பதவிக்கான தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான வக்கீல்கள் எழுத்துத் தேர்வில் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், இந்த தேர்வில் கலந்துகொண்ட மாற்றுத் திறனாளிகளான கிறிஸ்டியன், விக்னேஷ் பிரபு, சிட்டிபாபு,வெங்கடேஷ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது: சிவில் நீதிபதிகளுக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றோம். அதன் பின்னர் நடந்த நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றோம். ஆனாலும் எங்களுக்கு பணியிடம் வழங்கப்படவில்லை. மாற்றுத் திறனாளிகளான எங்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சிவில் நீதிபதிகள் பணி வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கே.என்.பாஷா, பால்வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரர்கள் மாற்றுத்திறனாளிகள். அவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. அவர்களுக்கு காலில்தான் ஊனமே தவிர கைகள் முழு அளவில் வேலை செய்கின்றன என்று கூறியுள்ளனர். மனுதாரர்கள் எழுத்துத் தேர்விலும், நேர்முக தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களால் நீதிபதிகளாக பணியாற்ற முடியும். மாற்றுத் திறனாளிகளுக்கு சிவில் நீதிபதிகள் பணியிடத்தில் 8 இடங்கள் உள்ளன. இந்த பட்டியலில் இவர்கள் 4 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மனுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும். அவர்களுக்கு சலுகை காட்டாமலிருப்பது நியாயமானதல்ல.
நீதிமன்ற பணிகளில் ஈடுபட அவர்களுக்கு சட்ட ரீதியாகவும், மருத்துவரீதியாகவும் தகுதி உள்ளது. எனவே, அவர்களுக்கு பணி வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் 3 வாரங்களுக்குள் பரிந்துரை செய்ய வேண்டும். அதன்பின்னர் 4 வாரங்களுக்குள் தமிழக அரசு ஆணை பிறப்பித்து மனுதாரர்களுக்கு சிவில் நீதிபதிகளுக்கான பணி வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேர்வில் வெற்றி
» ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறுங்கள்
» தேர்வில் வெற்றி பெற எப்படிப் படிக்கலாம்?
» மாணவச் செல்வங்கள் தேர்வில் வெற்றி பெற... கல்விச் செல்வம் அருளும் கலைமகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum