தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Go down

ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்  Empty ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Post  ishwarya Fri May 24, 2013 4:36 pm



ஊட்டியில் திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சட்டமன்றத்தில் பேச விடாததால் மக்கள் மன்றத்தில் பேசுகிறோம். திமுக., ஆட்சியை கொச்சைப்படுத்தி பேசுகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் எங்களை தூக்கி வெளியே போடுகின்றனர். 110 விதியின் கீழ் அறிக்கை சமர்ப்பித்து எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிக்க முடியாமல் செய்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஸீ7 ஆயிரம் கோடியில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என அறிவித்த திட்டம் நிறைவேற்ற முடியாது. வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இருந்து எப்படி அனுமதி கிடைக்கும். அதுமட்டுமின்றி மின் உற்பத்திக்கு தேவையான நீர் உள்ளதா என்பது கூட தெரியாமல் மக்களை ஏமாற்றும் வகையில் இத்திட்டத்தை ஜெயலலிதா அறிவித்துள்ளார். இத்திட் டம் சாத்தியமே இல்லை.

தமிழகத்தின் மொத்த பட்ஜெட்டில் ஸீ30 ஆயிரம் கோடி மின் உற்பத்தி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி வருகிறார். இதுவும் சாத்தியமில்லை. வாக்குறுதி அளித்த ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. மின் வெட்டு அதிகரித்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை. திமுக., ஆட்சியில் 2 மணி நேரம் மட்டுமே மின் வெட்டு இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் 18 மணி நேரம் மின் வெட்டு அமலில் உள்ளது. இதனால் மக்கள் திண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டுபோயுள் ளது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமசந்திரன் ஸீ1 கோடியே 10 லட்சம் தேர்தல் நிதியை வழங்கினார். நீலகிரி எம்.பி., ராசா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் குண்டன், அரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக குன்னூர் வந்த முக.ஸ்டாலினுக்கு திமுகவினர் வரவேற்பளித்தனர். அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய அவர், Ôதமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளதாகவும், அதை கட்டுப்படுத்த வேண்டிய அதிமுக அரசு கண்டும் காணால் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum