ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் கோவையில் கைதானவர்களுக்கு 500 புக்கிகளுடன் நெட்வொர்க்
Page 1 of 1
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் கோவையில் கைதானவர்களுக்கு 500 புக்கிகளுடன் நெட்வொர்க்
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னையில் சிபிசிஐடி போலீசார்
அதிரடி சோதனை நடத்தி, புரோக்கர் நர்கித் லக்கி உள்பட 6 பேரை கடந்த 17ம்
தேதி கைது செய்தனர். நர்கித்திடம் நடத்திய விசாரணையில், கோவையை சேர்ந்த
சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார்
வலைவிரித்தனர். ஏஜென்ட் போல் தொலைபேசியில் பேசி, சிக்கவைத்தனர்.
பொன்னையராஜபுரம் ராஜம்மாள் லே,அவுட்டில் ஒரு அபார்ட்மென்ட்டில்
முகாமிட்டிருந்த புக்கிகள் மகாராஷ்டிராவை சேர்ந்த லட்சுமண் (56),
சாயிபாபாகாலனி குப்பகோணாம்புதூரை சேர்ந்த பாலு என்கிற பாலசுப்ரமணியம்,
உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த கட்டட கான்டிராக்டர் அக்பர் (51) ஆகிய மூன்று
பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். லட்சுமண் வீட்டில் நடத்திய
சோதனையில், 5 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம், லேப்டாப், 5 செல்போன்கள் ஆகியவை
பறிமுதல் செய்யப்பட்டன. பாலசுப்பிரமணியத்திடமிருந்து ஸீ40 ஆயிரம் பணம்
பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள், தமிழகம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து, 500 சப்,புக்கிகளுடன்
செயல்பட்டு வந்ததும், இதன்மூலம், பல கோடி ரூபாய் சுருட்டியதும் விசாரணையில்
தெரியவந்தது.
இந்நிலையில், ஐபிஎல் சூதாட்ட வழக்கில் கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த
மேலும் 2 பேர் நேற்று மதியம் சிக்கினர். இவர்களுக்கு, யார், யாரிடம்
தொடர்பு உள்ளது என்பது பற்றியும் தனிப்படை போலீசார் ரகசிய விசாரணை நடத்தி
வருகின்றனர். இக்கும்பலுக்கு தலைவனாக உள்ள லட்சுமண், மும்பையில் உள்ள 2
முக்கிய புள்ளிகளுடன் அடிக்கடி பேசியதும் தெரியவந்துள்ளது. சென்னை,
பெங்களூரில் உள்ள புக்கிகளுடனும் பேசியுள்ளார். இதுபற்றியும் விசாரணை
நடத்தி வருகின்றனர்.
கமிஷனர் பாராட்டு: கோவையில் பதுங்கியிருந்த புக்கிகள் பற்றிய தகவல்தெரிந்த
அடுத்த இரண்டு மணி நேரத்தில், புக்கிகளை கைதுசெய்த தனிப்படை
இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், சீனிவாசலு ஆகியோர் தலைமையிலான போலீசாரை மாநகர
போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பாராட்டினார்.
4 தொழிலதிபர்களுக்கு வலை
கைதான முக்கிய புள்ளி லட்சுமணன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்
தனிப்படை போலீசார் திருப்பூரை சேர்ந்த பனியன் அதிபர், கோவை ஒப்பணக்கார
வீதியை சேர்ந்த டெக்ஸ்டைல் உரிமையாளர், காரமடையை சேர்ந்த ஒரு தொழிலதிபர்,
கோவையைச் சேர்ந்த மற்றொரு தொழிலதிபர் என நான்கு பேரை தேடி வருகின்றனர்.
இவர்கள், பிடிபட்டால் மேலும் பல தகவல்கள் வெளிவரும் எனவும் தனிப்படையினர்
கூறினர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படமாகும் கிரிக்கெட் சூதாட்டம்: திருநங்கை ரோஸ் கதாநாயகி ஆனார்
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இதனால் மற்ற எந்த போட்டிக்கும் இல்லாத அளவில் ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம், பெட்டிங் கொடி கட்டி பறக்கிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெற
» நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி
» நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி
» அல்காயிதா பயங்கர நெட்வொர்க்
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இதனால் மற்ற எந்த போட்டிக்கும் இல்லாத அளவில் ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம், பெட்டிங் கொடி கட்டி பறக்கிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெற
» நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி
» நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி
» அல்காயிதா பயங்கர நெட்வொர்க்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum