தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓட்ஸ் பொங்கல்

Go down

ஓட்ஸ் பொங்கல் Empty ஓட்ஸ் பொங்கல்

Post  ishwarya Fri May 24, 2013 1:57 pm

இந்த ஓட்ஸ் பொங்கலை வச்சு பாருங்க.. முற்றிலும் மாறுபட்ட சுவையுடன் சூப்பரா இருக்கும்.


தேவையானப் பொருள்கள்:


ஓட்ஸ் - 2 கப்

பச்சைப் பருப்பு - 3/4 கப்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு


தாளிக்க:


நெய் - 2 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் 1 - டீஸ்பூன்

முந்திரி பருப்பு - 10

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

கறிவேப்பிலை - கொஞ்சம்


செய்முறை:


* முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பை வாசம் வர வறுத்துக் கொள்ளவும்.


* பிறகு குக்கரில் (அ) ஒரு பாத்திரத்தில் பருப்பு வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.


* பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அதில் ஒரு பங்கு ஓட்ஸூக்கு இரண்டரை
பங்கு தண்ணீ­ர் என 5 கப் தண்­ர் ஊற்றி கொதி நிலை வரும் வரை மூடி வைக்கவும்.


* கொதி வந்ததும் ஓட்ஸைப் போட்டு, தேவையான உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.


* இரண்டும் நன்றாகக் குழைந்து, வேகும் வரை மிதமானத் தீயில் வைத்திருக்கவும்.


* ஒரு வாணலியில் நெய் விட்டு சூடுபடுத்தவும்.


* அதில் மிளகு(ஒன்றிரண்டாகப் பொடித்து), சீரகம், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும்.


* அல்லது தாளித்த பிறகு பொங்கலை வாணலியில் சேர்த்து கிளறி இறக்கவும். இந்த முறையில் செய்யும்பொழுது மிகவும் நன்றாக இருக்கும்.


* இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் இவை மிகப் பொருத்தமாக இருக்கும்.


குறிப்பு: சாதாரண பொங்கல் போல் அல்லாமல் ஓட்ஸ் பொங்கல் செய்யும்போது
பச்சைப் பருப்பின் அளவைக் கொஞ்சம் கூட்டி செய்தால்தான் நன்றாக இருக்கும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum