தரணிவராகபுரம் கிராமத்தில் திருத்தணி முருகன் திருவீதி உலா
Page 1 of 1

தரணிவராகபுரம் கிராமத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வெள்ளிக்கிழமை திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருத்தணி நகரில் அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் முருகன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தை மாதத்தில் உற்சவ முருகப்பெருமான் மலைக்கோயில் இருந்து தரணிவராகபுரம் கிராமத்திற்கு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதேபோல் இந்தாண்டும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மலைப்படிகள், சரவணப்பொய்கை வழியாக தரணிவராகபுரம் கிராமதிற்கு சுவாமி வருகை தந்து பஜனை கோயிலில் எழுந்தருளினார்.
பின்னர் மாலை 6 மணிக்கு கிராமப் பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் பூஜைக்கு தேவையான பொருட்களை சீர்வரிசை எடுத்து சென்றனர். அதைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் 500-க்கும் அதிகமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இரவு 8 மணியளவில் சந்து தெரு, பெரிய தெரு, நாயுடு தெரு உள்ளிட்ட வீதிகளில் வழியாக வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை நடைபெற்றது. விழாவில் முருகன் கோயில் அலுவலர்கள் சுப்பிரமணியம், பேஷ்கார் பழனி, அர்சகர் சுதா குருக்கள், பாலாஜி குருக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருத்தணி முருகன் கோவில்
» திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழா

» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்
» திருத்தணி சப்த கன்னியர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum