தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செவ்வாய் கிரக உணவு பரிகாரம்

Go down

 செவ்வாய் கிரக உணவு பரிகாரம் Empty செவ்வாய் கிரக உணவு பரிகாரம்

Post  ishwarya Fri May 24, 2013 12:44 pm

வீடுகளின் ஒவ்வொரு பகுதியும் ஒரு கிரக நிலையை கொண்டது. இதில் அந்த கிரக நிலைக்குண்டான பகுதியில் ஏற்படும் குறைபாடுகளை தவிர்க்க, உணவு பொருட்களில் பரிகாரங்களை செய்வதும் பலன் தருவதாக அமையும். வீட்டிற்கு தெற்கு பகுதிக்குண்டானவர் செவ்வாய்.

இந்த திசையில் பள்ளம், ஆழ்துளை, செப்டிக் டேங்க், கழிவறை அமைந்திருப்பது, ஜாதகத்தில் 6, 8, 12ல் செவ்வாய் மறைந்தும் நீச்சம் பெற்றும் இருப்பது மற்றும் பாவகிரகங்களால் பார்க்கப்பட்டு செவ்வாய் வலுவிழந்திருப்பது போன்றவற்றிற்கு சில உணவு வகைகளை தவிர்த்து வந்தால் பலன் கிடைக்கும்.

கறிவேப்பிலை, கத்தரிக்காய், காரமான மிளகாய், சுண்டல், வெல்லம், ரவை, நிலக் கடலை, புளி, அனைத்து வகை இனிப்புகள், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பூவம்பழம், பிளம்ஸ், பலாப்பழம், கொடுக்காப்புளி, இலந்தைப்பழம், ஆட்டுக்கறி போன்ற உணவுகளையும், பாக்கு, பான்பராக், சிகரெட், மூக்குப்பொடி போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

வீட்டின் தெற்கு பகுதி குறைபாடுள்ளவர்கள் ஆட்டுக்கறி அதிகமாக உட்கொண்டால், செவ்வாயினுடைய குணம் கோபகுணமாக மாறும். இதன் காரணமாக உடல் நலம் குன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum