தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நவயுகச் சூரியன் சுவாமி விவேகானந்தர்

Go down

நவயுகச் சூரியன் சுவாமி விவேகானந்தர் Empty நவயுகச் சூரியன் சுவாமி விவேகானந்தர்

Post  ishwarya Fri May 24, 2013 11:53 am

சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழா நாடு நெடுக தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. 12, ஜனவரி 1863, பொங்கல் திருநாள் அன்று நரேந்திரர் அவதார சம்பவம் நிகழ்ந்தது. வீரேசுவர சிவனின் அருளாசியால்தான் குழந்தை பிறந்தது எ ன்று உறுதியாக நம்பிய தந்தை விசுவநாத தத்தர்- அன்னை புவனேஸ்வரி, குழந்தைக்கு ‘வீரேசுவரன்’ என்று பெயர் சூட்டினர். சுருக்கமாக ‘பிலே’ என்று அழைத்தனர். பின்னாளில் ‘நரேந்திரநாதர்’ என்ற பெயர் வழங்கலாயிற்று. அதுவும் சுருங்கி ‘நரேன்’ என்றானது.

நரேனின் குறும்புத்தனம் சொல்லி முடியாது. சகோதரிகளிடமும், வீட்டாரிடமும் ஏதாவது விஷமம் செய்தபடியே இருப்பான். குறும்பு அதிகமானால் 'சிவ சிவ' என்று சொல்லியபடியே அவன் தலையில் தண்ணீரை ஊற்றுவார் புவனேஸ்வரி. ‘பிலே, இவ்வளவு தொந்தரவு செய்தால் சிவபெருமான் உன்னைக் கைலாயத்தினுள் நுழைய விடமாட்டார்’ என்றும் கூறுவார். இதைக் கேட்டவுடனே ‘பிலே’ அமைதியாகி விடுவான். சாதுக்களையும், பிச்சைக்காரர்களையும் பார்த்ததும், தன் வீட்டில் உள்ள அனைத்தையும், எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும், சட்டென்று நரேன் எடுத்துக் கொடுத்து விடுவான். அதனாலேயே ஓர் அறையில் அவனைப் பூட்டி வைத்தனர். ஆனாலும் நரேன் ஜன்னல் வழியாக அவர்களைக் கூப்பிட்டு அறையில் இருந்த துணிகளைக் கொடுத்து விடுவான். அவர்களும் அவனை வாழ்த்திவிட்டுச் செல்வார்கள்.

சிறு வயதிலேயே கூர்மையான அறிவும் உண்மையை ஆராய்ந்தறிந்து செயல்படும் திறனும் பெற்றிருந்தான் நரேன். ஒரு பெரிய மரத்தில் ஏறி நரேனும், நண்பர்களும் விளையாடுவது உண்டு. இதனைச் சகிக்காத அந்த வீட்டுத் தாத்தா, ‘இந்த மரத்தில் ஏறாதே! இதில் உள்ள பூதம் உன் கழுத்தைப் பிடித்து நெறித்துவிடும்’ என்று கூறினார். இதைக் கேட்ட சிறுவர்கள் பயந்து ஓடினார்கள். நரேனோ சிறிதும் பயப்படாமல், ‘எத்தனையோ முறை இந்த மரத்தில் ஏறியாகிவிட்டது. பூதம் இருந்தால் அது எப்போதோ என்னைக் கொன்றிருக்கும்’ என்று கூறினான். மரத்தில் ஏறி விளையாடுவதையும் அவன் நிறுத்தவில்லை. இயல்பாகவே துணிவு மிக்கவன் நரேன். பிறருக்கு ஆபத்து என்றால், தன் உயிரையும் பொருட்படுத்தாது அவர்களைக் காப்பாற்ற ஓடுவான்.

ஒருமுறை தன் உறவின சிறுவனுடன் ஒரு திருவிழாவிற்குச் சென்றிருந்தான். அங்கே எதிர்பாராதவிதமாகப் பாய்ந்து வந்தது ஒரு குதிரை வண்டி. குதிரையின் கால்களில் சிக்க இருந்த சிறுவனைப் பளிச்சென்று பற்றி இழுத்து அப்பால் புரண்டான் நரேன். இதைக் கேள்விப்பட்ட அவனுடைய அன்னை புவ னேஸ்வரி ஆனந்தக்கண்ணீருடன், ‘‘நரேன், நீ இதுபோலவே எப்போதும் ஓர் ஆண்மகனாக இரு’’ என்று வாழ்த்தினார். இளைஞனாய் வளர்ந்துவிட்ட நரேனின் மனதில் கடவுளைப் பற்றிய பல சந்தேகங்கள். அவற்றில் தெளிவு காண, பலரிடமும் சென்று கேள்விகள் கேட்க லானார். படகு வீட்டில் முனிவர்போல் வாழ்ந்து வந்த தேவேந்திரநாத் தாகூரிடம் (ரவீந்திரநாத் தாகூரின் தாத்தா) கேட்ட போது, ‘நரேன், உனக்கு ஒரு யோகியின் கண்கள் உள்ளன.

நீ ஆழ்ந்து தியானம் செய்’ என்று மட்டும் கூறினார் அவர். அப்போதே அவன் ஒரு யோகிதான் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஒரு நாள் கல்லூரியில் பேராசிரியர் ஹேஸ்டி ஆங்கிலக் கவிஞர் வோர்ட்ஸ் வொர்த்தின் கவிதை ஒன்றுக்குப் பொருள் கூறும்போது அதில் கூறப்பட்டு ள்ள தன்னை மறந்த நிலையைப் பற்றி விளக்குகையில், ‘தட்சிணேசுவரத்தில் ஸ்ரீராம கிருஷ்ணர் என்ற ஒருவர் இருக்கிறார், அவர் இறைவனின் நினைவில் தன்னை மறந்த நிலைக்குச் செல்வதுண்டு’ என்று கூறினார். இதைக் கேட்டபின் அவரைக் காண ஆவல் கொண்டார் நரேந்திரர். விரைவில் ஒருநாள் நரேந்திரர் தட்சிணேசுவரத்திற்குச் சென்று ஸ்ரீராமகிருஷ்ணரை தரிசித்தார். நரேந்திரர் தன் மன ஆழத்தில் இருந்த கேள்வியை அவ ரிடம் கேட்டார்: ‘‘ஐயா, நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’’ விரைந்து வந்தது ஸ்ரீராமகிருஷ்ணரின் பதில்: ‘‘ஆம், கண்டிருக்கிறேன்.

உன்னைக் காண்பது போல் இல்லை; அதைவிடத் தெளிவாக நான் கடவுளைக் காண்கிறேன், அவரைக் காணவும், அவருடன் பேசவும் இயலும்?’’ நரேந்திரர் வியப்பில் ஆழ்ந்தார். ‘இத்தகைய ஒரு வரை அல்லவா நான் தேடிக் கொண்டிருந்தேன்’ என்று அவரது உள்ளம் விடை கண்டது. ஸ்ரீராம கிருஷ்ணருக்கும் நரேந்திரருக்கும் இடையே இருந்த அன்பு நாளுக்கு நாள் பெருகியது. ஒருநாள் நரேந்திரரின் தந்தை திடீரெனக் காலமானார். செல் வச்செழிப்பு நிறைந்த குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. கலங்கிய நரேந்திரர், ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்றபோது அவர் அன்னை காளியிடம் பிரார்த்திக்கச் சொன்னார். பிரார்த்தனை செய்யச் சென்ற நரேந்திரர் தன் தேவையை மறந்து பக்தி, ஞானம் மற்றும் வைராக்கியத்தைத் தந்தருளும்படி அன்னையிடம் பிரார்த்தித்தார். ‘என்னால் உலகியல் விஷயங்களைக் கேட்க முடியவில்லை’ என்று ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கூறினார் நரேந்திரர்.

தனது ஆன்மிக சக்திகள் அனைத்தையும் நரேந்திரருக்கு வழங்கினார் ஸ்ரீராமகிருஷ்ணர். பின்னர் 1886 ஆகஸ்ட் 16ம் நாள் அவர் மகாசமாதி அடைந் தார். நரேந்திரரும், பிற சீடர்களும் வராக நகர் பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டில் வசிக்கத் தொடங்கினர். உண்ண உணவும், உடுக்க உடையும் போதுமான அளவு இல்லையெனினும் தியானத்திலும் தவத்திலும் நாட்களைக் கழித்தனர். துறவறத்தை ஏற்ற நரேந்திரர் இப்போது ‘சுவாமி விவேகா னந்தர்’ ஆனார். சுவாமிஜி, அந்நியர் வசமிருந்த நம் பாரத நாட்டின் இழிநிலையை எண்ணி, எண்ணி மனம் நொந்தார். பிச்சை உணவு ஏற்று நடைப்பயணமாகவே பார தம் முழுவதும் சுற்றி, தன் நாட்டு மக்களின் துயர் துடைக்க வழி தேடினார். கன்னியாகுமரியில் கடல் சூழ்ந்த இரு பெரிய பாறைகளுள் ஒன்றில் அமர்ந்து மூன்று நாட்கள் இரவும் பகலும் தியானம் செய்தார்.

மேலை நாட்டில் பாரதத்தின் உயர்ந்த ஆன்மிகக் கருத்துகளைப் பரப்ப வேண்டும், அவர்களுடைய தொழில் நுட்பத்தையும் விஞ்ஞான வளர்ச்சியையும் இந்நாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்னும் புதிய திட்டத்துடன் அங்கிருந்து திரும்பினார். சுவாமிஜியின் திட்டத்தைச் செயலாக்குவதற்காகவே ஏற்பட்டதுபோல் அமெரிக்காவில் சர்வமத மகாசபை கூட்டப்பட இருந்தது. சென்னை அன்பர்களா லும், சிற்றரசர்கள் சிலராலும் ஊக்குவிக்கப்பட்ட சுவாமிஜி அமெரிக்கா செல்ல தயாரானார். மேலும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் தெய்வீகத் துணைவி யான அன்னை ஸ்ரீசாரதா தேவிக்குக் கடிதம் எழுதி ஆசிகளும் பெற்றார். சிகாகோ சென்ற சுவாமிஜி அறிமுகக் கடிதம் எதுவும் இல்லாததாலும் வேறு பல காரணங்களாலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்.

11 செப்டம்பர் 1893. பல இன்னல்களையும் கடந்து சர்வமத மகாசபையில் பங்கேற்கும் நாள் வந்தது. சமயப் பிரதிநிதிகள் ஒவ்வொருவராகப் பேசினர். நண்பகலில் சுவாமிஜி கலைமகளை வணங்கிவிட்டுப் பேசத் தொடங்கினார். ‘அமெரிக்க நாட்டுச் சகோதரிகளே! சகோதரர்களே!’ என்று அவர் ஆரம்பித்தபோது, அரங்கமே உணர்ச்சிப் பெருக்கால் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த சுவாமிஜியின் குரலைக் கேட்டு அவர்கள் கரைந்து போனார்கள். அவரது சொற்கள் ஒவ்வொருவரின் இதயத்தையும் தொட்டன. நரேன் உலகிற்குப் போதிப்பான் என்று ஸ்ரீராம கிருஷ்ணர் கூறியதற்கு ஏற்ப சுவாமிஜி, தனது சொற்பொழிவாலும் கடின உழைப்பாலும் பாரத மக்கள் மட்டுமில்லாது உலக மக்கள் அனைவரது ஆன்மிக முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்தார்.

அன்னை ஸ்ரீசாரதாதேவியும் அவருக்குத் தமது பூரண ஆசிகளையும் வழங்கினார். தாயகம் திரும்பிய சுவாமிஜி பல ஆக்கபூர்வமான பணிகளை ஆரம்பித்து, ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ எனும் பாதையில் மக்களை நெறிப்படுத்தினார். சுவாமி விவேகானந்தரின் அறைகூவலுக்குச் செவிசாய்த்து இளைஞர்கள் பலர் துறவிகளாக முன் வந்தனர். ஆகவே, கொல்கத்தாவிற்கு அருகே கங்கை யின் மேற்குக் கரையில் பேலூர் கிராமத்தில் 1898, டிசம்பர் 9ம் நாள் சுவாமிஜி ஒரு மடத்தைத் துவக்கினார். இன்று ஓர் ஆலமரம் போல் வேரூன்றி விட்ட இந்த இயக்கத்திற்கு உலகெங்கும் கிளைகள் உள்ளன. 1902 ஜூலை 4. தியானத்தில் ஆழ்ந்திருந்த அவர் அந்நிலையிலேயே பூவுலக வாழ்வை நீத்தார்.

பேலூர் மடத்தில் அந்த அறை இன்றும் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. கங்கைக் கரையில் அவரது உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் அழகிய கோயில் ஒன்று உருவானது. அவர் பேசிய மற் றும் எழுதியவற்றின் தொகுப்புகள், அவர் உருவாக்கிய ராமகிருஷ்ண இயக்கம் மற்றும் அவர் தொடங்கிய பணிகள் ஆகியவற்றால் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum