மூச்சுக் காற்றில் அலையும் தீபம்
Page 1 of 1
மூச்சுக் காற்றில் அலையும் தீபம்
திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும், நான்குனேரி-ஏர்வாடி-வள்ளியூர் வழியில் ஏர்வாடியை அடுத்து 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, திருக்குறுங்குடி திருத்தலம். வாமன அவதாரத்துடன் இத்தலப் பெருமாள் தொடர்பு கொண்டதால், குறுங்குடி என்று தலத்துக்குப் பெயர். தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த நம்பாடுவானுக்கு பகவான் தரிசனம் தருவதற்காக கொடி மரம் விலகி வழி விட்டது. அந்தக் கொடிமரம் இப்போதும் விலகியே உள்ளது. வராக அவதாரத்தில் பெருமாள், பூமிப்பிராட்டியாரைத் தனது மடியில் அமர்த்திக் கொண்டு கைசிக மகாத்மிய பெருமைகளை விளக்கியது இந்தத் தலத்தில்தான்.
கைசிக புராணத்தைப் பாடுபவர்களுக்கு ஆழ்வார்-திருநகரி போன்ற திவ்ய தேசங்களில், பிரம்ம ரத மரியாதை செய்வார்கள். கோயில் வளாகத்தில் மகேந்திரகிரி நாதர் என்னும் சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள பைரவர் சந்நதி முன்பு எரியும் தீபம் ஒன்று அசைந்து கொண்டே இருக்கிறது. பைரவர் விடும் மூச்சுக் காற்றுதான் காரணம் என்கிறார்கள். இத்தலத்தில் நின்ற நம்பி, கிடந்த நம்பி, இருந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி, வைஷ்ணவ நம்பி, மலைமேல் திருமலைநம்பி ஆகியோரை தரிசிக்கலாம்.
நின்ற நம்பி, கிடந்த நம்பி, இருந்த நம்பி மூவரும் திருக்குறுங்குடி ஆலயத்துக்குள்ளேயே உள்ளனர். மூலவரின் திருமேனி சுதையாலானது. கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். இரு பிராட்டியர், மர்க்கண்டேயர், பிருகு மகரிஷியுடன் சேவை சாதிக்கின்றார். மலைமேல் உள்ள நம்பி கோயிலில், ஆவணி கடைசி சனிக்கிழமை அன்று உறியடி விழா நடக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மூச்சுக் காற்றில் அலையும் தீபம்
» காற்றில் அலையும் சிறகு
» மூச்சுக் கலை-யோகிகள் கடைப்பிடித்த சுவாச அறிவியல்
» காற்றில் யாரோ நடக்கிறார்கள்
» காற்றில் கரையும் கற்பூரங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum