தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பதி தெப்ப உற்சவம் : 23ம் தேதி தொடக்கம்

Go down

  திருப்பதி தெப்ப உற்சவம் : 23ம் தேதி தொடக்கம் Empty திருப்பதி தெப்ப உற்சவம் : 23ம் தேதி தொடக்கம்

Post  ishwarya Thu May 23, 2013 5:20 pm

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்ப உற்சவம் வரும் 23ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆண்டுக்கான தெப்ப உற்சவம் வரும் 23ம் தேதி தொடங்குகிறது.

5 நாட்கள் நடக்கும் இந்த உற்சவம் 27ம் தேதி நிறைவடைகிறது. இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 23ம் தேதி மாலை ராமர்
அலங்காரத்தில் சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத சுவாமி தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 2வது நாள் ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் ருக்மணி சமேதராக வலம் வருகிறார்.

3வது நாளில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக 3 முறையும், 4வது நாள் 5 சுற்றும், 5வது நாள் 7 சுற்றும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தெப்ப உற்சவம் நடைபெறும் முதல் 3 நாட்களுக்கு வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது. கடைசி 2 நாட்களுக்கு இந்த சேவையுடன் ஆர்ஜிதசேவைகளும்ரத்து செய்யப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» ஏழுமலையான் கோயிலில் 15ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்
» ஏழுமலையான் கோயிலில் 15ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்
» ஏழுமலையான் கோயிலில் 15ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்
» 26-ந் தேதி திருப்பதி கோவில் மூடப்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum