தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாவங்கள் போக்கும் துளசி மாலை

Go down

  பாவங்கள் போக்கும் துளசி மாலை Empty பாவங்கள் போக்கும் துளசி மாலை

Post  ishwarya Thu May 23, 2013 2:25 pm

அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று ‘ராம ராம ராம’ நாமம் சொல்வது விசேஷம். ‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்’ என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும்.

இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

ஆன்ம பலம், மனபலம், புத்திபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும்.

தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்போது பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அக்கலசத்தின்றும் பச்சை நிறத்துடன் ஸ்ரீ துளசி மகாதேவி தோன்றினாள்.

துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகாவிஷ்ணு வைத்துக்கொண்டு ஏனையவற்றைத் தேவர்களுக்கு வழங்கி விட்டார். துளசி தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் ஆகியோர் வசிக்கின்றனர். இலையின் நுனியில் பிரமன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி சரசுவதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர்.

துளசியை நினைத்தால் பாவம் போகும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான். துளசியை வழிபட்டால் ஆயுள் பலம், புகழ், செல்வம், மகட்பேறு முதலியன பெருகும். துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப் பருகினவர் பரமபதம் செல்வர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum