சக்கரத்தாழ்வார் கோவில்
Page 1 of 1
சக்கரத்தாழ்வார் கோவில்
ஸ்தல வரலாறு.....
கடலூர் அருகே உள்ள அரிசி பெரியாங்குப்பத்தில் சுயம்புவாக தோன்றிய சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளது. 20 அடி உயர சிறிய மலைக்குன்றில் இந்த கோவில் அமைந்துள்ளது. 13-ம் நூற்றாண்டில் இந்த கோவில் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 13-ம் நூற்றாண்டில் கோவில் அமைந்துள்ள இடத்தில் கடல் இருந்ததாக சொல்கின்றனர்.
பெருமாள் கடலில் குளித்து விட்டு அந்த குன்றின் மீது வந்து அமர்ந்ததாகவும் அப்போது தனது வலது கையில் உள்ள சக்கரத்தை அங்கு வைத்து விட்டு சென்றதாகவும் நம்பப்படுகிறது. இதையடுத்து சக்கரத்தாழ்வார் கோவில் சுயயம்புவாக தோன்றியதாக கூறுகின்றனர்.
தமிழ்நாட்டிலேயே சுயம்புவாக தோன்றிய சக்கரத்தாழ்வார் கோவில் இங்கு மட்டும் தான் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள சக்கரம் 3ப அடி உயரம் உள்ளது. இந்த சக்கரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு 1 அடி உயரம் மட்டுமே இருந்தாகவும் அது தானாக வளர்ந்து இப்போது இந்த உயரத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
கோவிலில் சித்திரை வருட பிறப்பின் போது லட்சதீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். ஆனி மாதத்தில் சுதர்சன ஜெயந்தியும், சிறப்பு யாகமும் நடக்கின்றன. புரட்டாசி 3-ம் சனிக்கிழமை கருட வாகனசேவை மற்றும் வீதியுலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தைமாதம் 3-ம் வெள்ளி, 5-ம் வெள்ளி கிழமைகளில் அரசு-வேம்பு திருக்கலயாணம் நிகழ்ச்சியும் இங்கு விமரிசையாக நடைபெறும். இந்த கோவிலில் ஒவ்வொரு நாளும் வழிபடும் போது ஒவ்வோரு விசேஷ பலன் இருப்பதாக ஐதீகம் உள்ளது.
செவ்வாய்க்கிழமை வழிபட்டால் இடப்பிரச்சினை, கடன் பிரச்சினை தீரும், வியாழக்கிழமை வழிபட்டால் தொழில் வளர்ச்சியும், கல்வி யோகமும் கிடைக்கும். வெள்ளிக்கிழமை வழிபடுவோருக்கு லட்சுமி கடாட்சம், ஐஸ்வர்யம் கிடைக்கும்.
குழந்தை இல்லாதவர்களும், திருமணதடை உள்ளவர்களும் வெள்ளிக்கிழமை வழிபட்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். பில்லிசூனியம், ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை வழிபட்டால் அவர்கள் பிரச்சினை தீரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சக்கரத்தாழ்வார் கோவில்
» ஸ்ரீவில்லிப்புத்தூர் சக்கரத்தாழ்வார் கோவில்

» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» சக்கரத்தாழ்வார் அருள்தரும் மாசுரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum