தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேதார நாதர் விரதம்

Go down

 கேதார நாதர் விரதம் Empty கேதார நாதர் விரதம்

Post  ishwarya Thu May 23, 2013 12:02 pm

கேதாரம் வயல் இமயமலையில் ஒரு வயல் வெளியில் சுயம்பு லிங்கமாக அவதரித்தவர் கேதாரநாதர். இவரை வழிபட்டு விரதமிருப்பது கேதாரநாதர் விரதம். இதனைப் புரட்டாசி மாதம் குறித்த நாள்களில் அனுட்டிக்க வேண்டும். அவை வருமாறு:-

1. வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாள்கள்.

2. தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை -14 நாள்கள்.

3. தேய்பிறை அட்டமி முதல் சதுர்த்தசி வரை -7 நாள்கள்.

4. தேய்பிறை சதுர்த்தசி -1 நாள்.

21 நாள்கள் விரதமிருக்கும்போது முதல் இருபது நாள்கள் ஒரு பொழுது உண்ணலாம். இருபத்தோராம் நாள், சதுர்த்தசியன்று, ஒரு பொழுதும் உண்ணாமல் முழு விரதம் காக்க வேண்டும்.

இருபத்தோரு இழைகளைக் கொண்ட காப்புக் கயிற்றை ஆடவர் வலக்கையிலும், மகளிர் இடக்கையிலும் கட்டியிருப்பது முறையாகும். கேதார நாதரைக் கும்பத்தில் நிறுவி அல்லது பிம்பத்தில் நிறுவி வழிபடலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum