திரு ஊரகம்
Page 1 of 1
திரு ஊரகம்
ஸ்தல வரலாறு.......
இது உலகளந்த பெருமாள் கோவில் என வழங்கப்படுகிறது. ஊரகம் என்பதும் உலகளந்த பெருமாள் கோவில் என்பதும் ஒன்றே. பெருமாள் 35 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்டு நெடிது உயர்ந்து தனது இடக்காலை விண்ணோக்கி தூக்கியும், இடக்கரத்தில் இரண்டு விரல்களையும் வலக்கரத்தில் ஒரு விரலையும், உயர்த்தியும் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார்.
இக்கோவிலின் பிராகாரத்திலேயே, நீரகம், காரகம், கார்வானம் ஆகிய வேறு மூன்று சிறிய சந்நிதிகள் இருக்கின்றன. இப்படி நாலு திவ்ய தேசங்களின் பெருமாள்கள், ஒரே இடத்திலேயே எழுந்தருளி இருக்கிறார்கள். பெருமாள் சந்நிதிக்குப் பக்கத்தில், பகவான், ஆதிசேஷனாகத் திருக்கோலம் கொண்டு சேவை சாதிக்கின்ற சந்நிதியும் இருக்கிறது.
திருமழிசையாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இந்தத் திவ்ய தேசத்தைப் பற்றித் தேனாகப் பேசியிருக்கிறார்கள். மகாபலி கசக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் வேண்டி, வாமன அவதாரம் எடுத்த இறைவன் மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைக்க மகாபலி இறைவனது திருவடியின் கீழ் அகப்பட்டு பாதாள உலகில் வீழ்ந்தான். அப்பவும் மகாபலி சக்ரவர்த்திக்கு ஒரு ஆசை.
பகவானின் திருக்கோலத்தை முழுமையாகக் காண இயலவில்லையே என்றெண்ணி பாதாள உலகத்திலே பெருமாளை நோக்கித்தவம் செய்தான். இந்த தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் இந்த தலத்திலேயே `மகாபலி`க்கு உலகளந்த திரக்கோலத்தை மறுபடியும் காட்சியாகத் தந்தார்.
எத்தனையோ தவறுகளைச் செய்து கொண்டிருந்தாலும் நிச்சயம் மன்னிப்பு தந்து நம்மைக் குறையில்லாத மனிதனாக வாழ வைப்பார் என்ற பக்தியோடு இந்தக் கோவிலுக்கு வருகிறவர்களுக்கு மகாபலிச் சக்ரவர்த்திக்கு காட்சி தந்தது போல் பெருமாள் தினமும் காட்சி தந்து அருள்வார். அத்தனை பாவங்களையும் மன்னித்து அனுக்கிரம் கிடைக்கும் அருமையான புனிதத்தலம் இது!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திரு ஊரகம் கோவில்
» திரு ஊரகம் கோவில்
» திரு ஊரகம் கோவில்
» திரு.சித்தர் மணி
» திரு.வி.க. வின் சைவ சொற்பொழிவுகள்
» திரு ஊரகம் கோவில்
» திரு ஊரகம் கோவில்
» திரு.சித்தர் மணி
» திரு.வி.க. வின் சைவ சொற்பொழிவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum