துன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு
Page 1 of 1

வழிபாடு
துன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடுசிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர். பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கும் பைரவர் என்பது பெயராயிற்று.
பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ விரதம் இருந்து வழிபட்டால் எந்தத் துன்பமும் நம்மை அணுகாது. பொங்கல் திருநாள், மகர சங்கராந்தி, ரதசப்தமி, உத்தராயன புண்ணியகாலத் துவக்கம் என எண்ணற்ற வைபவங்களுடன் திகழும் தை மாதத்துக்கு இன்னொரு விசேஷமும் உண்டு.
ஆமாம் காவல் தெய்வம் பைரவர் வழிபாட்டுக்கும் உகந்த மாதம். தை மாதம் முதல் செவ்வாயில் துவங்கி, அனைத்து செவ்வாய்க் கிழமைகளிலும் பைரவரை வழிபடுவது சிறப்பு. தேய்பிறை அஷ்டமி திருநாள் பைரவரை வழிபடுவதற்கு உகந்த தினம். குழந்தை இல்லாமல் வருந்தும் தம்பதியர், தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமி திருநாட்களில்...
செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வத்தால் பைரவரை அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பர். அதே போல், தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ ஹோமம் செய்வதுடன், பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் கலச தீர்த்தத்தைப் பருகுவதால் தீராத பிணிகளும் தீரும் என்பர்.
அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று, அங்கு அரள்பாலிக்கும் பைரவமூர்த்திக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி, தயிர் அன்னம், தேன் மற்றும் தேங்காய் சமர்ப்பித்து வழிபடுவதால் பில்லிசூனியம் போன்ற தீவினைகள் நீங்கும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். வீட்டிலேயே நேரம் கிடைக்கும் போது பைரவ சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வதாலும் மிகுந்த பலன் உண்டு.
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், பைரவருக்கு விபூதி அபிஷேகத்துடன், வடைமாலை அணிவித்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால், திருமணத் தடை அகலும் என்பார்கள். வளர்பிறை அஷ்டமி திருநாட்களில் அல்லது வெள்ளிக்கிழமை மாலை வேளையில் , வில்வம் மற்றும் வாசனை மலர்களை சமர்ப்பித்து பைரவருக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வறுமைகள் நீங்கும்.
செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் சகலவிதமான தோஷங்களும் விலகும். மகாபைரவரை திரிபுர பைரவராகவும் வழிபடும் வழக்கம் உண்டு.
கரைசேர முடியாத பெருந்துன்பங்களையும் நீக்கி அருள்புரிவாராம் திரிபுர பைரவர். கோயில்களில் நடைபெறும் பிரமோற்ஸவத்துக்கு முன்பாகவும், விழா முடிந்த பின்னரும் பைரவரை வழிபட வேண்டும் என்கின்றன ஆகம நூல்கள்.
முன்பெல்லாம், சிவாலயங்களில் இரவில் பைரவரை பூஜித்து வழிபட்டு, ஆலயக் கதவுகளை மூடி சாவியை அவரது சன்னதியில் சமர்ப்பிப்பது வழக்கம். இப்போது, கைமணியையும் கலசத்தையும் அவர்முன் வைத்துச் செல்கின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» துன்பம் போக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
» துன்பம் போக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
» பைரவர் வழிபாடு பலன்கள்....
» வழக்குகளில் வெற்றி பெற பைரவர் வழிபாடு
» நலம் தரும் பைரவர் வழிபாடு
» துன்பம் போக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
» பைரவர் வழிபாடு பலன்கள்....
» வழக்குகளில் வெற்றி பெற பைரவர் வழிபாடு
» நலம் தரும் பைரவர் வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum