வழிபாட்டு குறிப்புகள்
Page 1 of 1
வழிபாட்டு குறிப்புகள்
சரபேஸ்வரர் வழிபாடு........... ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணியிலான ராகு காலம் சரபருக்கு உகந்த பூஜை நேரமாகும். 11 ஞாயிற்றுக்கிழமைகள் அர்ச்சனை செய்து 12-வது ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்ரீ சரபேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால், எல்லா இடைïறுகளும் நீங்கி நினைத்த காரியம் கைகூடும்.
அரசமர பிரதட்சிணம்.......... திங்கட்கிழமை வரும் அமாவாசை அன்று சூரிய உதயத்திற்குள் அரச மரத்தைத் தொடாமல் பிரதட்சிணம் செய்து வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும். சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் அரச மரத்தைத் தொடாமல் 108 முறை பிரதட்சணம்- ஒரு மண்டலம் பிரதட்சிணம் செய்து வந்தால் தீராத நோய்கள் தீரும். இதில் நாக சிலைகள் பிரதிஷ்டை செய்துள்ள அரச மரமாயிருந்தால் இன்னும் விசேஷம்.
காலங்களும் பூக்களும்......... நாம் பூஜை செய்யும் காலத்திற்கேற்ப பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும் என ஆன்மீகப் பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவை வருமாறு:-
விடியற்காலப் பூஜைக்குரிய பூக்கள் கொன்றை, சாமந்தி, செண்பகம் முதலிய மஞ்சள் நிறப் பூக்கள்.
* பகற்காலப் பூஜைக்குரிய பூக்கள் செந்தாமரை, செவ்வலரி, பாதிரி முதலிய சிவப்பு நிறப் பூக்கள்.
* யாம காலப் பூஜைக்குரிய பூக்கள் மல்லிகை, முல்லை, தும்பை, வெள்ளைருக்கு முதலிய வெள்ளை நிறப் பூக்கள். பொதுவாக மஞ்சள், வெள்ளை நிறப் பூக்கள் பூஜைக்கு மிக உத்தமம்.
அம்பாளை வழிபட....... அம்பாளை வழிபட உகந்த மாதங்கள் தை, ஆடி, அம்பாளை வழிபட உகந்த நாட்கள் செவ்வாய், வெள்ளி. அம்பாளை வழிபட உகந்த திதி அஷ்டமி, சதுர்த்தசி, பவுர்ணமி. அம்பாளை வழிபட உகந்த நட்சத்திரம் உத்திரம்.
உள்ளங்கை தத்துவம்......... உள்ளங்கையின் அடிப்பாகத்தில் பார்வதியும், மத்தியில் சரஸ்வதியும், மேற்புறத்தில் லட்சுமியும் விளங்குகிறார்கள். எனவே காலையில் கண் விழித்தவுடன் உள்ளங்கைகளை பார்த்துத் தரிசித்து கொள்ள வேண்டும்...

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இறை வழிபாட்டு முறை
» இறை வழிபாட்டு முறை
» தெட்சிணாமூர்த்தி வழிபாட்டு பலன்கள்
» தெட்சிணாமூர்த்தி வழிபாட்டு பலன்கள்
» தினசரி வழிபாட்டு ஸ்தோத்திரங்கள்
» இறை வழிபாட்டு முறை
» தெட்சிணாமூர்த்தி வழிபாட்டு பலன்கள்
» தெட்சிணாமூர்த்தி வழிபாட்டு பலன்கள்
» தினசரி வழிபாட்டு ஸ்தோத்திரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum