தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்

Go down

சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்  Empty சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்

Post  ishwarya Wed May 22, 2013 6:10 pm

மூலவர் : பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர்

அம்மன்/தாயார் : திரிபுர சுந்தரி

மாவட்டம் : கடலூர்

மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்: திருநாவுக்கரசர் (வைப்புத்தலம்)

திருவிழா: மகா சிவராத்திரி, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிசேகம்

தல சிறப்பு:

இங்கு சிவன் கிழக்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். கோயில்களில் "சாளரக் கோயில்' என்ற வகை உண்டு. இத்தகைய கோயில்களில் மூலவர் எதிரில் வாசல் இருக்காது. இறைவனை "பலகணி' எனப்படும் கல் ஜன்னல் (சாளர கரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும். இக்கோயிலும் சாளரக்கோயில் வகையை சார்ந்தது. மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு.

திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 11.30 மணி வரை மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர் -605 106, கடலூர் மாவட்டம்.

போன்: +91- 413 - 269 9422, 94427 86351.

பொது தகவல்:

இங்குள்ள தல விநாயகர் சுந்தர விநாயகர். மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு. இந்த மண்டபத்தில் நின்று வழிபாடு செய்தால் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது நம்பிக்கை.

பிரகாரத்தில் சுந்தர விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான், ருக்மிணி பாமாவுடன் வேணு கோபாலன், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், காமதேனு, பைரவர், சனிபகவான், நால்வர் உள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சியில், கடலூர் கலெக்டராக இருந்த பகோடா என்பவரது மகள் தனக்கு பார்வை வேண்டி இத்தல இறைவனை பூஜித்தாள். பலன் கிடைத்ததும் மிகப்பெரிய மணியை கோயிலுக்கு அளித்தாள். இந்த மணியின் ஓசை நீண்ட தூரம் கேட்கும்.

பிரார்த்தனை

கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

அம்மனின் பாதத்தின் கீழ் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.

முருகனுக்கு முக்கியத்துவம்: சிவத்தலமாக இருந்தாலும் முருகனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முருகனுக்கு எதிரில் தான் கொடி மரம் இருக்கிறது. கந்தசஷ்டி தான் பிரம்மோற்ஸவ விழாவாகும். இங்குள்ள சுந்தர விநாயகர் பெயருக்கேற்றாற்போல் அழகாக விளங்குகிறார். முகத்தில் பருக்கள், வடுக்கள் உள்ளவர்கள், இவருக்கு சந்தனகாப்பு செய்து வழிபடுகிறார்கள். மகா மண்டபத்தில் "கர்ண விதாயினி' என்னும் பெயரில் சரஸ்வதியைப் போல் வீணை வாசிக்கும் தோற்றத்தில் ஒரு சிற்பம் உள்ளது. இவளை வணங்கி கல்வியில் விருத்தியடையலாம். துவாரபாலகர்களை எந்தக் கோயிலிலாவது வலம் வர முடியுமா? இங்கே அப்படி ஒரு அமைப்பு இருப்பது சிறப்பு.

மார்க்கண்டேயனை காப்பாற்ற எமனை காலால் எட்டி உதைக்கும் காலசம்ஹார மூர்த்தி இங்கு அருள்பாலிக்கிறார். எனவே ஆயுள் விருத்திக்கான யாகங்களும், பூஜைகளும் நடத்தலாம். திருவாதிரை நட்சத்திரத்தில் "மகா மிருத்யுஞ்ஜய ஹோமம்' நடக்கிறது. இத்தலம் "வட திருக்கடையூர்' என்றும் அழைக்கப்படுகிறது.

தல வரலாறு:

பழமையான கோயில் என்பதால் இத்தலத்தின் வரலாறை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், கோயிலின் அமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பலகணி வழியாக பார்க்கின்ற சிவ லிங்கங்கள், அக்னியின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. இவரை நேரடியாக தரிசிப்பதற்கான உடல் வலிமை பக்தனுக்கு இருக்காது. எனவே பலகணி வழியாக வழிபாடு செய்தால், அவரவர் உடல் நிலைக்கு தகுந்தாற் போல் அக்னி திகள் இறைவனிடமிருந்து வெளிப்பட்டு உடல் பலமும் மனபலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

மூலவருக்கு கீழே நவக்கிரக யந்திரமும், வெளியே நந்தி மண்டபமும் உள்ளது. இத்தலத்தில் 5 நிமிடம் வழிபாடு செய்தால் பல்லாண்டு வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள். சுவாசம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தட்சிணாயண (ஆடி), உத்ராயண (தை) புண்ய காலங்களில் சூரியனுக்குரிய ஆரஞ்சு நிற ஆடை, கோதுமை வகை உணவுகளை தானமாக கொடுத்து பலனடைகின்றனர். பிதுர் தோஷத்துக்கும் ஏற்ற தலம் இது. ராஜகோபுரம் திரிபுரசுந்தரி அம்மன் எதிரில் 3 நிலை, 5 கலசங்களுடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் கிழக்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். கோயில்களில் "சாளரக் கோயில்' என்ற வகை உண்டு. இத்தகைய கோயில்களில் மூலவர் எதிரில் வாசல் இருக்காது. இறைவனை "பலகணி' எனப்படும் கல் ஜன்னல் (சாளர கரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும். இக்கோயிலும் சாளரக்கோயில் வகையை சார்ந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum