காளேஸ்வரர் திருக்கோவில்
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
காளேஸ்வரர் திருக்கோவில்
மோட்சத்தைத் தரும் ஏழு நகரங்களில் உஜ்ஜயினியும் ஒன்று. காசி அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, அவந்தி (உஜ்ஜயினி), துவாரகை ஆகியவை ஏழு மோட்சபுரிகள் என்கிறது காசி காண்டம்.இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட உஜ்ஜயினி நகரின் நாயகமாக விளங்குவது மகா காளேஸ்வரர் திருக்கோவில்!
இங்குள்ள மகா காளேஸ்வரர் லிங்கம் இந்தியாவின் புகழ்மிக்க பன்னிரண்டுஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. சுயம்பு மூர்த்தி. இங்கே பின்னிரவு 2.30 மணிக்கு நடத்தப்படும் பஸ்ம ஆரத்தி சிறப்பு வாய்ந்தது. திருநீறால் ஈசனுக்கு அபிஷேகம் செய்து மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபிப்பார்கள்.
இந்தத் திருநீறணிந்தால் எமபயம் நிச்சயம் அகலும் என்பது பக்தர்களின் அனுபவம். முற்காலத்தில் மயானத்திலிருந்து எடுத்து வந்த சாம்பலைக் கொண்டே இந்த வழிபாடு நடத்தப்பட்டதாம். தற்போது பசுஞ்சாணத்திலிருந்து ஆகம முறைப்படி தயாரிக்கப்படும் திருநீறே பயன்படுத்தப்படுகிறது.
வழிபடும் போது இந்த சிவனை நாம் தொட்டு வணங்கலாம்; அபிஷேகமும் செய்யலாம். இந்த ஈசன் தெற்கு நோக்கி கோவில் கொண்டுள்ளது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இதன் காரணமாக இவர் தட்சிணாமூர்த்தீஸ் வரர் என்றும் அழைக்கப் பெறுகிறார்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா விழா நடைபெறும் நான்கு தலங்களில் இதுவும் ஒன்று. இவ்வாண்டு அலகாபாத்தில் பூரண கும்பமேளா நடைபெற்றது. 2016-ல் உஜ்ஜயினியில் இவ்விழா நடைபெறும்.
ஆலயத்துக்கு அருகில் ஷிப்ரா என்னும் புனித நதி ஓடுகிறது. இதில் நீராடியபின் இறைவனை வழிபடுதல் மரபு. இவ்வாலயத்தில் பார்வதி தேவி, விநாயகர், சுப்ரமண்யர் ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள் உள்ளன. மற்றும் கலை நுணுக்கம் வாய்ந்த ஏராளமான சிற்பங்களும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன.
பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்கள் இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகள் செய்துள்ள குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. கி.பி. 1736-ல் ராணாஜிராவ் சிந்தியாஜி மகாராஜ் என்ற மன்னன் இவ்வாலயத்துக்கு சிறப்பான திருப்பணிகளை மேற்கொண்டுள்ளார். அதன்பின்னர் ஸ்ரீநாத் மாதவாஜி என்பவர் திருப்பணி செய்துள்ளார்.
தற்போது குவாலியர் அரச பரம்பரையைச் சேர்ந்த சிந்தியா வம்சத்தினர் இவ்வாலயத்தைப் பராமரித்து வருகிறார்கள். கார்த்திகைப் பௌர்ணமியும், மகா சிவராத்திரியும் இங்கே மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பொதுவாக எல்லா ஆலயங்களிலுமே ஒருமுறை பூஜைக்கு உபயோகித்த பொருட்களை (நிர்மால்யம்) மறுமுறை பயன்படுத்த மாட்டார்கள்.
ஆனால் இந்த ஆலயத்தில் பூஜைப் பொருட்களை மீண்டும் பயன்படுத்தும் நடைமுறை வியப்பான ஒன்றாகும். மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ளது உஜ்ஜயினி நகரம்.
இந்நகர ரயில் நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலை வில் அமைந்துள்ளது மகா காளேஸ்வரர் ஆலயம். தன்னை நாடி வரும் அனைவருக்கும் மரண பயம் நீக்கி நீண்ட ஆயுள் தருபவராக இங்கே கோவில் கொண்டுள்ளார்- காலனை வென்ற மகா காளேஸ்வரர்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காளேஸ்வரர் திருக்கோவில்
» மாற்றுரைவதீஸ்வரர் திருக்கோவில்
» திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
» திலதர்ப்பணபுரி திருக்கோவில்
» மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்
» மாற்றுரைவதீஸ்வரர் திருக்கோவில்
» திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
» திலதர்ப்பணபுரி திருக்கோவில்
» மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum