தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவபெருமானின் பெயர்கள்

Go down

சிவபெருமானின் பெயர்கள்  Empty சிவபெருமானின் பெயர்கள்

Post  ishwarya Wed May 22, 2013 5:25 pm

சிவபெருமான் 10 வகையான பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

அவை

1. பவன்,

2. ருத்திரன்,

3. மிருடன்,

4. ஈசானன்,

5. தாணு,

6. சம்பு,

7. சருவன்,

8. உக்கிரன்,

9. பர்க்கன்,

10. பரமேசுவரன்.

பவன் - தன்னிடமிருந்து எல்லாவற்றையும் உருவாக்குபவன். ருத்திரன் - பிறப்பு, இறப்பு ஆகிய நோய்களை நீக்கி குற்றம் குறைகளைப் போக்குபவன்.

மிருடன் - எல்லோருக்கும் சுகம் அளிப்பவன். அதேபோல் உரிய இடத்தில் சேரும்படி வைப்பவன்.

ஈசானன் - தனக்கு மேலான யார் ஒருவரும் இல்லாதவன்.

தாணு - சிறிதும் அசைவு இல்லாமல் நிலைபெற்று இருப்பவன்.

சம்பு - உயிர்களுக்கெல்லாம் வீடு பேரின்பத்தினைக் கொடுத்து அருள்பவன்.

சருவன் - கொடியவர்களைத் தண்டித்துக் கொல்பவன்.

உக்கிரன் - சூரியன், சந்திரன் ஆகியவைகளின் தோற்றம் மற்றும் மறைவுக்குக் காரணமாக இருப்பவன். கடல்களை எல்லைக்குள் அடக்குபவன். ஐம்பூதங்களின் தோற்றம் மற்றும் ஒடுக்கங்களுக்குக் காரணமாக இருப்பவன்.

பர்க்கன் - சூரியன், சந்திரன், அக்னி ஆகியவற்றுக்கு ஒளி கொடுப்பவன். காயத்ரி போன்ற மந்திரங்களால் வழிபடப் பெறுபவன். உயிர்களின் அறியாமை முழுவதையும் போக்கி அருள்பவன்.

பரமேசுவரன் - ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்பவன்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum