எந்த ராசிக்காரருக்கு,அழகான மனைவி அமையும் ?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
எந்த ராசிக்காரருக்கு,அழகான மனைவி அமையும் ?
ஜோதிடத்தில் அழகான மனைவி யாருக்கு அமையும் என விலாவரியாக சொல்லப்பட்டிருக்கிறது.அதன் படி அமைந்தும் இருக்கிறது..ஏற்கனவே அப்படி அழகான மனைவி அமைந்தவரின் ஜாதகங்களில் இருக்கும் கிரக நிலைகளை காலம் காலமாக சேகரித்த தகவல் அடிப்படையில்தான் இந்த திருமண பொருத்தம் அழகான மனைவி பதிவு எழுதப்படுகிறது.கடினமான ஜோதிட கணக்குகளை நான் எழுதுவதில்லை.வாசகர்கள் சுலபமாக புரிந்து கொள்ளும் அடிப்படை கணக்குகளை மட்டுமே சொல்கிறேன்.ரிசபம் ராசிக்காரருக்கு,கடகம்,துலாம்,தனுசு ராசிகாரருக்கு அழகான மனைவி அமையும் என சொன்னால் எல்லோருக்கும் புரியும்.நவாம்சம்,டிகிரி கணக்கு வாரியாக கிரகம் அமர்ந்த நிலை என நீட்டி முழக்கினால் ஒரு பேரா கூட படிக்க மாட்டார்கள். ரிசபம் ராசிக்காரர்கள் அனுபவிக்க பிறந்தவர்கள் சாப்பிடும் உணவு கூட நல்ல ருசியாக இருக்கணும்…சாப்பிடும் இடம் சுத்தமா அழகா இருக்கணும் என நினைப்பவர்கள்….ரிசபம் சுக்கிரன் ராசியல்லவா எதுவும் பெருசா ஆசைப்படுற ராசி..ஒரு வேலை ஆகணும்னா மகர ராசிக்காரருக்கு 10 ரூபா கொடுத்தா போதும்..ஆனா அதே வேலைக்கு 50 ரூபா ரிசப ராசிகாரருக்கு கொடுக்கணும்…ரிசப ராசி வாங்குற ராசி ..கொடுக்குற ராசி..கோடி கோடியா சம்பாதிச்சாலும்…ரோட்டுல 10 ரூபா கிடந்தா ஒரு மணி நேரம் நின்னாவது அதை எடுத்துகிட்டுத்தான் போகும்..அதே மாதி மத்தவங்களுக்கு கிள்ளிக்கூட கொடுக்காது..நீங்க கருணாநிதியை நினைச்சிகிட்டா நான் பொறுப்பல்ல.ரிசப ராசி மனைவி விசயத்துல இன்னும் உசாராத்தானே இருப்பாங்க…அதனால் இவர் மனைவி அழகுதான்..அல்லது பல அழகான பெண்களுடன் நட்பு வைத்துக்கொள்ள தயங்க மாட்டாங்க.. தனுசு,துலாம்,கடகம் ராசியினரும் இதே போலத்தான்..பெண்கள் விசயத்தில் பெரிய ஆய்வாளர்கள்….ரசனையான ஆட்கள்..புன்னகை,பேச்சு,கண்கள்,முகம்னு ஒவ்வொரு பாகமா இவங்க ரசிச்சு காதலிச்சு கல்யாணம் செய்வாங்க.. மகரம்,கும்பம்,சிம்மம்.,மேசம்,விருச்சிகம்..எல்லாம் இஷ்டப்பட்டு கல்யாணம் செய்றவங்க..இல்ல..கஷ்டப்பட்டு கல்யாணம் செய்பவர்கள்னு சோதிடம் சொல்கிறது.நல்ல நேரம் வந்தா கல்யாணம் நடக்கும்னு இவங்க வேலையை பார்த்துக்கிட்டே இருப்பாங்க..கன்னி,மீனம் ராசிகாரர்களுக்கும் மிதுனம் ராசிகாரர்களும் கணக்கு போட்டு துணையை தேர்வு செய்யக்கூடியவங்க..இவரு உம்மணாமூஞ்சியா,நகைச்சுவையா பேசக்கூடியவரா..கேரக்டர் எப்படி…இவங்க குடும்பம் எப்படி ந்னு அலசோ அலசுன்னு அலசிதான் கல்யாணம் பண்ணுவாங்க..அழகு இரண்டாம்பட்சம் குணம் தான் முக்கியம் நு நினைக்கிற கேரக்டர் இது பொதுவான குறிப்புகள் தான்…ஜாதகத்தில் நான்காம் இடம் வலுத்தவர்,7 ஆம் இடத்தை சுபர் பார்வை செய்பவர்,சுக்கிரன்,குரு வலுத்தவர்களுக்கு அழகான மனைவிதான் அமையும்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கணவன் மனைவி ஒற்றுமை வளர எந்த விரதம் இருக்கவேண்டும்?
» பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?
» ஜாதகப்படி எந்த எந்த முறைகளில் எல்லாம் பணம் வரும்?
» பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?
» எந்த முகத்திற்கு எந்த வகை தலை அலங்காரம் அழகு.
» பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?
» ஜாதகப்படி எந்த எந்த முறைகளில் எல்லாம் பணம் வரும்?
» பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?
» எந்த முகத்திற்கு எந்த வகை தலை அலங்காரம் அழகு.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum