சிவனுக்கு உகந்த ஐந்து வகை சிவராத்திரி விரதங்கள்
Page 1 of 1

சிவனுக்கு உகந்த ராத்திரியான சிவராத்திரி ஐந்து வகையாக உள்ளது. அவை மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐந்து வகையான சிவராத்திரிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். மகா சிவராத்திரி: மாசி மாதத்தில் தேய்பிறையில், கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரி எனப்படும். இன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது இதற்கான பலனாகும்.
யோக சிவராத்திரி: திங்கட்கிழமை முழுவதும் வரும் அமாவாசையானது யோக சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. நித்திய சிவராத்திரி: ஆண்டின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை சதுர்த்தசி 12, வளர்பிறை சதுர்த்தசி 12 என இருபத்து நான்கு சிவராத்திரிகளும், நித்திய சிவராத்திரி எனப்படும்.
பட்ச சிவராத்திரி: தை மாதத்தில் தேய்பிறையில் வரும் பிரதமை திதியில் இருந்து 13 நாள் வரையில், நியமத்துடன் ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு, 14-வது நாளான சதுர்த்தசி அன்று உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரியாகும்.
மாத சிவராத்திரி: மாதம் தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும். இவற்றில் ஒன்றையோ, இரண்டையோ, மூன்றையோ, நான்கையோ அல்லது ஐந்தையுமோ அவரவர் சக்திக்கு ஏற்ப கடைபிடித்து வரலாம். அதற்கான பலன்கள் உங்களை மட்டுமின்றி, உங்கள் சந்ததியையும் சகல சவுபாக்கியங்களுடன் வாழ வைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிவனுக்கு உகந்த ஐந்து வகை சிவராத்திரி விரதங்கள்
» ஐந்து வகை சிவராத்திரி விரதங்கள்
» ஐந்து வகை சிவராத்திரி விரதங்கள்
» மகா சிவராத்திரி
» அனைத்தும் சிவனுக்கு ஐந்து
» ஐந்து வகை சிவராத்திரி விரதங்கள்
» ஐந்து வகை சிவராத்திரி விரதங்கள்
» மகா சிவராத்திரி
» அனைத்தும் சிவனுக்கு ஐந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum