தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ சண்டதாண்டவ மூர்த்தி

Go down

ஸ்ரீ - ஸ்ரீ சண்டதாண்டவ மூர்த்தி  Empty ஸ்ரீ சண்டதாண்டவ மூர்த்தி

Post  ishwarya Wed May 22, 2013 4:41 pm

நடனமும் பாட்டோடு நட்டுவாங்கம் ஓங்க

படமெடுக்கும் நாகநாதர் பார்ப்பார்-சுடராக

தாண்டவ கோலத்தை தக்கோர்கள் கண்டிட

தாண்டவ மூர்த்தியானார் காண்!

திருவாலங்காட்டில் பைரவருக்கும் காளிதேவிக்கும் சண்டை நடந்தது. இதில் காளிதோற்றாள். உடனே காளி, சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள். இருவரும் நடனம் ஆடினார்கள். இந்த சண்ட தாண்டவத்தின்போது கீழே விழுந்த குண்டலத்தை சிவன் காலால் எடுத்து தன் காதில் பொருத்தினார். காளியால் அப்படி செய்ய முடியாததால், அவள் தோல்வி அடைந்தாள்.

இதனால் அவள் செருக்கு அழிந்தது. பிறகு சிவபெருமான் அனைவருக்கும் தாண்டவகோலத்தை காட்டி அருளினார். இந்த சண்ட தாண்டவ கோலத்தை நாம் கும்பகோணம் கீழ்க் கோட்டத்தில் உள்ள ஆலயத்தில் தரிசிக்கலாம். இவரை வழிபட்டால் பாட்டு, நடனம், நட்டுவாங்கத்தில் திறமை பெறலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum