தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சி - கவனிக்கப்பட வேண்டியவை

Go down

உடற்பயிற்சி - கவனிக்கப்பட வேண்டியவை Empty உடற்பயிற்சி - கவனிக்கப்பட வேண்டியவை

Post  ishwarya Wed May 22, 2013 2:35 pm

தற்போதுள்ள காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கடமைக்காக உடற்பயிற்சியை செய்ய கூடாது. முதலில் உடற்பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது. ஆர்வத்தோடும், விடா முயற்சியோடும் உடற்பயிற்சிகளை செய்ய பழகிக் கொள்ள வேண்டும். சில பயிற்சிகள் சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும்.

அதற்காக மனம் தளரவோ, இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது. இயற்கை காற்றோட்ட வசதி உள்ள இடங்களில் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது.

மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக, நிதானமாக நடைபெற வேண்டும். உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த புதிதில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது. அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது.

பயிற்சிகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் சாப்பிட்ட உடன் பயிற்சிகளை ஒரு போதும் செய்யக் கூடாது. பயிற்சி செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும். சாப்பிட்டு குறைந்தது 3 மணி நேரம் கழித்த பின்னரே உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.

பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது. சுமார் 30 நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டுப் பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும். பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum