நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி
Page 1 of 1

தவறான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை, பரம்பரை போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு அல்லது சர்க்கரை வியாதி வந்து விட்டாலே, மற்ற நோய்களும் நம் உடலில் இடம் பிடிக்க வரிசையில் நின்றுவிடும்.
ஆனாலும்,மிக மிகச் சாதாரண எளிய உடற்பயிற்சிகளை அன்றாடம் சுமார் அரை மணி நேரம் செய்வதால், டைப் 2 டயபடிஸ் (சர்க்கரை நோய்) நோயிலிருந்து தப்பலாம் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
காலை நேரத்தில் வாக்கிங் செல்லுதல், வேகமாக நடத்தல் அல்லது ஓடுதல், கை-கால்களை மேலே தூக்கி எளிய உடற்பயிற்சிகளைச் செய்தல் போன்றவை இதில் அடங்கும். தற்போதைய நிலையில் வாரத்திற்குக் குறைந்தது 5 நாட்களுக்கு அரை மணி நேர நடைபயிற்சி சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த நடைபயிற்சியை மேற்கொள்ளத் தவறி விடுகிறார்கள். நேரமின்மை, ஊக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடைபயிற்சியை அவர்கள் மேற்கொள்வதில்லை. அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் அதிக நேரம் மிகக் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும்.
ஆண்களைப் பொருத்தவரை இளம் வயதில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை 15 நிமிட நேர உடற்பயிற்சியே போதுமானதாகும் என்றும் தெரிய வந்துள்ளது. சிறு சிறு இடங்களுக்குக் கூட காரில் செல்வதை விட நடந்து சென்றால் உடலுக்கும் உற்சாகம் கிடைக்கும், மின் படிக்கட்டுகளையும், மின் தூக்கிகளையும் வயதானவர்களுக்கு ஒதுக்கிவிடுங்கள்.
படிகட்டுகளைப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்கள் இவ்வழியைத் தேர்ந்தெடுக்கலாம். சர்க்கரை நோயின்றி வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தினமும் குறைந்தது 30 நிமிட நேரமாவது நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறையாவது உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறை

» நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பதாம் பருப்பு.
» நீரிழிவு நோயை கட்டுப்படுத்த யோகாசன சிகிச்சை.
» நீரிழிவு நோயை கட்டுப்படுத்த யோகாசன சிகிச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum