கோடைக்கு கொடையாகும் பழங்கள்
Page 1 of 1
கோடைக்கு கொடையாகும் பழங்கள்
கோடை கடுமையானதுதான். ஆனால் அதற்கேற்பச் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் கோடையின் கொடுமையில் இருந்து தப்பித்துவிட முடியும். அந்த வகையில் சில பழங்கள் நமக்குப் பெரிதும் கைகொடுக்கின்றன. அவை பற்றி...
* தர்பூசணி: தற்போது எங்கும் கிடைக்கும் தர்பூசணி, தாகத்தைத் தணிக்கும். பசியைப் போக்கும். வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடி வயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறு நீரகக் கோளாறுகள், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும் மருந்தாக உதவும். உடலுக்குக் குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும்.
* ஆரஞ்சு: பசியைத் தூண்டவும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் பயன்படுகிறது. ஆரஞ்சை ஆயுர்வேத வைத்திய முறை பெரிதும் பயன்படுத்துகிறது. ஆரஞ்சு வாயைச் சுத்தமாக்குகிறது. காய்ச்சலுக்கும் அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும். ஆஸ்துமா மற்றும் நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது.
* சாத்துக்குடி: குளிர்ச்சியான, இனிப்பான, சுவையான பழம் சாத்துக்குடி. தாகத்தைத் தணிக்கும். வீரியத்தைக் கூட்டும். வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சிநிலை, ரத்தத்தில் கழிவுப்பொருட்கள் சேருதல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது.
வயிற்றில் அமிலத்தன்மை சேருவதை இதில் உள்ள காரத்தன்மை குறைத்து, வயிற்று எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகம் கொண் சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடியின் சாறை வெந்நீரில் கலந்து அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்ல பலனிருக்கும்.
காய்ச்சலின்போது வெறுமனே சாத்துக்குடி சாறைக் குடித்தாலே போதும். உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும். அமிலத்தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கும். செரிமானக் கோளாறுகளை வேகமாகப் போக்கும்.
* வெள்ளரிக்காய்: வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகையுண்டு. வெள்ளரியும் நல்ல நீரிளக்கி. செரிமானத்துக்கு உதவுவது. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து குடல்களுக்குக் குளிர்ச்சியூட்டுகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. நெஞ்செரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது.
தலை சுற்றலைத் தடுக்கிறது. வெள்ளரி, மூட்டுவலி வீக்க நோய்களையும் குணமாக்குகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கோடையில் நாம் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறி வெள்ளரி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடைக்கு சிறந்ததுங்க பீச் பழம்
» கொளுத்தும் கோடைக்கு‘கூல்’டிப்ஸ்
» கொளுத்தும் கோடைக்கு‘கூல்’டிப்ஸ்
» கொளுத்தும் கோடைக்கு‘கூல்’டிப்ஸ்
» கொளுத்தும் கோடைக்கு‘கூல்’டிப்ஸ்
» கொளுத்தும் கோடைக்கு‘கூல்’டிப்ஸ்
» கொளுத்தும் கோடைக்கு‘கூல்’டிப்ஸ்
» கொளுத்தும் கோடைக்கு‘கூல்’டிப்ஸ்
» கொளுத்தும் கோடைக்கு‘கூல்’டிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum