ஆரோக்கியத்தை இழந்து வரும் பிரத்தானிய மக்கள்
Page 1 of 1

உலகிலேயே உடற்பயிற்சி செய்பவர்கள் மிகக் குறைவான உள்ள நாடு பிரித்தானியா என்று உலக சுகாதார நிறுவனம் (றுர்ழு) கூறியுள்ளது. ஐரோப்பா கண்டத்திலேயே உடல் பருமனான ஆண்களை அதிகம் கொண்டுள்ள நாடும் பிரித்தானியாதான். இதனால் அந்த நாட்டில் இதயம், நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தவிர நீரிழிவுநோய், புற்றுநோய், வலிப்பு மற்றும் உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் உபாதைகளும் அந்நாட்டு மக்களுக்கு அதிகரித்து வருகிறது. அந்நாட்டு மக்களில் சுமார் 63 சதவீதம் பேர் வாரத்துக்கு 30 நிமிடங்கள் கூட உடற்பயிற்சி மேற்கொள்வது இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் ஒப்பிடும் போது அவுஸ்திரேலியா மக்களில் பலர் பிரித்தானியாவைச்சேர்ந்தவர்களை விட உடல் எடை அதிகம் உள்ளவர்களாக உள்ளனர். சவுதி அரேபியா, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளில் உள்ள மக்களிடையே உடல்ரீதியாக செய்யக்கூடிய பணிகள் பெருமளவில் குறைந்து விட்டன. நடப்பது, சைக்கிளில் செல்வது, ஓடியாடி விளையாடுவது போன்றவை 25 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே பெருமளவில் குறைந்து வருகிறது. இதுபோன்ற உடல்ரீதியான இயக்கங்கள் குறைவதால் நோய்களால் எளிதில் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 32 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். நீரிழவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அனைத்து நாடுகளிலும் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது.
இந்தநோயால் 2008ம் ஆண்டில் 3 கோடியே 60 இலட்சம் பேர் இறந்தனர். 2030ல் இந்தஎண்ணிக்கை 5 கோடியே 20 இலட்சமாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆரோக்கியத்தை காக்கும் உடற்பயிற்சி
» ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி அவசியம்
» ஆரோக்கியத்தை தரும் கேரட் சூப்!!!
» கண்களை வைத்தும் உடல் ஆரோக்கியத்தை சொல்லலாம்!
» உடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் கண்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum