நீரழிவு நோயினால் ஏற்படும் குறைபாடுகள்.
Page 1 of 1
நீரழிவு நோயினால் ஏற்படும் குறைபாடுகள்.
01) நீரழிவு நோயினால் ஏற்படும் கண் பார்வைக் குறைபாடுகள்
ஒளிக் கதிர்கள் விழியின் முன்பகுதியான வெண்படலத்தின் ஊடாக ஆடியை அடைந்து அங்கிருந்து விழித்திரையில் குவிகின்றன. விழி வெண்படலம் கோர்னியா (Cornea) என்றும் விழி ஆடி லென்ஸ் (Lens) என்றும் அழைக்கப்படுகின்றன.
ஒளியைப் பெற்ற விழித்திரை அதை மின்சக்தியாக மாற்றிப் பார்வை நரம்பு (Optical Nerve) மூலம் மூளைக்கு அனுப்புகிறது. விழித்திரை இல்லாமல் பார்வை சாத்தியமாகாது நீரழிவுநோய் விழித்திரையைப் பாதிக்கின்றது. நீரழிவினால் கண்புரை, கண் நீர் அழுத்த நோய் போன்றவை ஏற்படுகின்றன.
விழித்திரை இரத்தக் குழாய்கள் மூலம் ஊட்டச் சத்துக்களைப் பெறுகிறது. நீரழிவு நோயால் இரத்தக் குழாய்கள் பலவீனமடைகின்றன. பலவீனமடைந்த குழாய்களில் இருந்து இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இதனால் விழித்திரையும் கண் பார்வையும் வலுவிழக்கின்றன.
விழித்திரையின் குழிவான மையப் பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டால் அது முழுமையான பார்வை இழப்பை ஏற்படுத்தலாம். விழித்திரை இரத்தக் கசிவினால் விழித்திரையின் எல்லாப் பகுதிகளுக்கும் ஊட்டச் சத்துக்கள் சென்றடைய மாட்டாது. இதை நிவர்த்தி செய்வதற்காக விழித்திரை தானே புதிய இரத்தக் குழாய்களை உருவாக்கும்.
புதிதாக உருவாக்கப்பட்ட இரத்தக் குழாய்கள் பலமற்றவையாக இருக்கும். இது மேலதிக இரத்தக் கசிவிற்கு வழிவிடும். இதன் காரணமாக நீரழிவு நோயளர்கள் மற்றவர்களிலும் பார்க்க 25 விகிதம் கூடுதலான பார்வை இழப்பு அல்லது பார்வைக் குறைபாடுகளைச் சந்திக்கின்றனர்.
கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் விழித்திரைப் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். இதற்கான காரணத்தை இதன் கீழ் பார்க்கலாம். நீரழிவு நோயளார்கள் கண் பரிசோதனை செய்வது அவசியம். நீரழிவு நோயாளர்களின் வழமையான கண் பார்வைக் குறைபாட்டு அறிகுறிகள் பின்வருமாறு.
கண்களுக்கு முன்னே கரும் புள்ளிகள் தெரியும். நேர்க் கோட்டில் பார்க்கும் போது இவை தென்படும். அடுத்ததாக பார்வைத் திறன் மாற்றங்கள் ஏற்படும். லேசர் சிகிக்சை, அறுவை சிகிச்சை மூலம் பார்வை இழப்பை தடுக்க முடியும்.
02 கர்ப்பகால நீரழிவு நோய்
இந்த நோய் ஆங்கிலத்தில் (Giabetes Mellitus) எனப்படும். கர்ப்ப கால நீரழிவு நோயை மருத்துவர்கள் சுருக்கமாக ஜீ4 (G4) என்று குறிப்பிடுவார்கள். இது பரம்பரையாகத் தொடரும் நோயாகக் கருதப்படுகிறது. இந்தரக நீரழிவை அடையாளம் காண்பதற்கு மருத்துவ உதவியை நாட வேண்டும். தாயாருக்கு அல்லது தந்தைக்கு நீரழிவு நோய் இருந்தால் கர்ப்பிணி மகளுக்குத் தொடரும் வாய்ப்பு இருக்கிறது. இது பற்றிப் பயப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம். சோற்றைப் பிரதான உணவாகக் கொண்ட இனங்களுக்கு கர்ப்ப கால நீரழிவு நோய் வரக் கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. இந்த நோய் குறிப்பிட்ட எல்லையைக் கடந்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டும். இன்சூலின் ஊசி போட்டுக் கட்டுப்படுத்தலாம்.
கர்ப்ப கால நீரழிவைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். கர்ப்பம் தரியாத காலத்தில் ஒரு சராசரி பெண்ணுக்கு 1875 கலோரிகள் தேவைப்படுகின்றன. கர்ப்பிணிக்கு மேலதிகமாக 300 கலோரிகள் தேவைப்படுகின்றன. இதை உணவு மூலம் தான் பெறமுடியும்.
கர்ப்ப கால நீரழிவு நோயுள்ளவர்கள் மாச்சத்து, இனிப்புச்சத்து உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உயர்புரத (High Protein) உணவுகளை உண்ணவேண்டும். அத்தோடு உயர்நார்சத்து (High Fibre) உணவையும் விற்றமின்களையும் கனிமங்களையும் (Minerals) உட்கொள்வது அவசியம்.
உயர் கொழுப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இந்த நோய் சாதாரண நிலையைக் கடந்து கடுமையாகினால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இப்படியான கர்ப்பிணிகளின் உணவு ஆலோசனை இதன் கீழ் தரப்பட்டுள்ளது.
புழுங்கல் அரிசி, சிவப்பு நிற அரிசி, கோதுமை, கேள்வரகு, சோளம், கம்பு ஆகியவற்றை உண்ண வேண்டும். உயர்புரத உணவுகளாக கோழிமுட்டை வெள்ளைக்கரு, மீன், கொழுப்பு இல்லாத கோழி இறைச்சி என்பன. கோழி தவிர்ந்த பிற இறைச்சிகளைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
விற்றமின்கள், கனிமங்கள் அடங்கிய உணவு அல்லது மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். மரக்கறிகளில் கிழங்கு வகைகளை நீக்கி விட்டு மற்றவற்றை உண்ணலாம். பழங்களில் மாம்பழத்தை தவிர்க்க வேண்டும். எண்ணைகள் – நல்லெண்ணை, கடுகெண்ணை அரிசித் தவிட்டு எண்ணை என்பன சிறியளவில் உட்கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டியவற்றின் பட்டியல்- வெள்ளைச் சீனி, இனிப்புக்கள், சொக்கிலேற்று, ஐஸ் கிறிம், கேக், பிற்சா போன்ற மாவுச் சத்துணவுகள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மனோரீதியான பாலியல் குறைபாடுகள்
» நீரிழிவு நோயினால் காதுகள் செவிடாகும்:ஆய்வில் தகவல்

» நீரழிவு குறைய
» நீரழிவு நோய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum