வாழைப்பழத்தின் மருத்துவ பயன்கள்
Page 1 of 1
வாழைப்பழத்தின் மருத்துவ பயன்கள்
இயற்கையான சர்க்கரைகளான Sucrose, Fructose மற்றும் Glucose ஆகியவை வாழைப்பழத்தில் நிறைந்துள்ளன. வாழைப்பழம் ஏராளமான வியாதிகளிலிருந்தும் நம்மைக் காக்கிற ஒன்றாய் இருக்கிறது. அது நிச்சயம் நமது அன்றாட உணவில் இடம்பெற வேண்டும். வாழைப்பழத்தில் மற்ற பழங்களைவிட அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது.
ஆகவே இரத்த அழுத்தத்தை சமன் செய்கிறது.தினமும் வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உங்கள் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும். வாழைப்பழமும் சுத்தமான தேனும் கலந்து சாப்பிட்டால் வயிறு அமைதியாக வாழும்.
மாதவிலக்கு தள்ளிப்போதல் மற்றும் அது சம்பந்தமான மாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் (especially :- Premenstrual Syndrome) தாராளமாக வாழைப்பழம் சாப்பிடுங்கள். எப்படியெனில் வாழைப்பழத்தில் பி6 விட்டமின் (Vitamin B6) நிறைய உள்ளது.
அது இரத்தத்தில் சர்க்கரை அளவையும் மற்றும் மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யவும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும் (Sugar Patients) கவனிச்சுக்கோங்க. வாழைப்பழத்தில் இரும்புச் சத்து ஏராளம் இருப்பதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் (hemoglobin) உற்பத்திக்கு காரணமாகிறது.
ஆகவே இரத்த சிவப்பணுக் குறைபாடுகளை சரி செய்கிறது. நிறைய மருத்துவமனைகளில் அல்சர் நோயாளிகளுக்கு வாழைப்பழம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. வயிற்றில் சுரக்கும் அமிலங்களை சமநிலைப் படுத்துவதால் இது பரிந்துரைக்கப்படுகிறது. குடல் கோளாறுகளுக்கு இது அருமையான மருந்து.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்
» ஏலக்காயின் மருத்துவ பயன்கள்
» பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்
» பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்.
» கறிவேப்பிலை மருத்துவ பயன்கள்...
» ஏலக்காயின் மருத்துவ பயன்கள்
» பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்
» பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்.
» கறிவேப்பிலை மருத்துவ பயன்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum