பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் !!!
Page 1 of 1
பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் !!!
பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. இந்த பூசணிக்காயை சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.
உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.
வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும், இரத்தசுத்தியாகும். பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல்,நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும்.
பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.
பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும்(தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்.
» பூசணிக்காயின் மருத்துவக் குணங்கள்:-
» கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
» கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
» ஆமணக்கின் மருத்துவ குணங்கள்
» பூசணிக்காயின் மருத்துவக் குணங்கள்:-
» கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
» கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
» ஆமணக்கின் மருத்துவ குணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum