மஞ்சள் காமாலை வந்தால்.
Page 1 of 1
மஞ்சள் காமாலை வந்தால்.
கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் பாதிப்புதான் மஞ்சள் காமாலை. இது, வைரஸ் கிருமியின் தாக்குதலால் ஏற்படுகிறது. பிறந்த குழந்தைக்கும்கூட மஞ்சள் காமாலை வரவாய்ப்பு உள்ளது. அது சில நாட்களில் சரியாகி விடும். மஞ்சள் காமாலை வந்தால் கல்லீரல், மண்ணீரலோடு மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
பொதுவாக மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு பசி எடுக்காது, கடுமையான காய்ச்சல் இருக்கும். சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சினை மற்றும் சிறுநீர் மஞ்சளாக வெளியேறுதல், கண் மற்றும் உடல் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற பிரச்சினைகள் உருவாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டால் 3 மாதங்கள் வரை பத்திய சாப்பாடு சாப்பிட வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை : மசாலா வகைகள், கார உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சமையலில் அதிக எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. மஞ்சள் காமாலை வந்து 5 மாதங்கள் வரை அசைவ உணவுகளை உட்கொள்ளக்கூடாது. முட்டையில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்.
அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகளையும் விலக்கி வைக்கவும். மாவுச் சத்து உள்ள உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 3 இளநீர் என்றாலும் குடிக்க வேண்டும். மோர், முட்டையின் வெள்ளைக் கரு தினமும் சாப்பிடலாம். காய்ச்சல் ஏற்பட்டால் அதற்கு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை சாப்பிடுவதே நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum