தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரத்தத்தில் இருந்து நோய் அகற்றும் நுண்ணிய காந்தங்கள்!

Go down

ரத்தத்தில் இருந்து நோய் அகற்றும் நுண்ணிய காந்தங்கள்! Empty ரத்தத்தில் இருந்து நோய் அகற்றும் நுண்ணிய காந்தங்கள்!

Post  ishwarya Tue May 21, 2013 4:33 pm

நமது உடலின் ரத்தத்தில் இருந்து தீங்கு செய்யும் மூலக்கூறுகளை ஈர்த்து அகற்றக்கூடிய காந்தப்புலம் வாய்ந்த நுண்ணிய துகள்களை (நானோ பார்ட்டிக்கிள்கள்) விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர். இவற்றின் பிரம்மாக்களான சுவிட்சர்லாந்து ஜூரிச் நகர ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தைச் சுத்தப்படுத்த இது ஒரு நல்ல வழியாக இருக்கும் என்கிறார்கள்.



நச்சுப் பாதிப்பு, ரத்த ஓட்டத் தொற்று மற்றும் சில குறிப்பிட்ட வகை புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகவும் கைகொடுக்கும் என்பது இவர்களது கருத்து. இந்த ஹநானோ பார்ட்டிக்கிள்கள், கார்பன் பூச்சு செய்யப்பட்டு ரத்தத்தில் இருந்து அகற்றவேண்டிய பொருட்களுக்கு ஏற்ற ஹஆன்டிபாடிகள்’ சேர்க்கப்பட்டதாக இருக்கின்றன.

இந்த நுண்ணிய காந்தங்களை ரத்த ஓட்டத்தில் செலுத்தி பின்னர் டயாலிசிஸ் செய்வதன் மூலம் இன்டர்லியூகின்ஸ் போன்ற தீங்கு தரும் புரதங்கள் காரீயம் போன்ற அபாயகரமான உலோகங்களை அகற்றலாம் என்கிறார்கள்.



“ரத்தத்தில் குறிவைக்கப்பட்ட பொருட்களை இந்த நானோ மேக்னட் ஈர்க்கும் பின்னர் அவை மறுபடி ரத்த ஓட்டத்தில் சுழலாமல் ஒரு செப்பரேட்டர் தடுக்கும்” என்று இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஜூரிச் பல்கலைக்கழக வேதிப் பொறியாளர் இங்கே ஹெர்மான் கூறுகிறார்.



இதய நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து ஹடிகோக்ஸின்’. இதன் அளவு அதிகமானால் மரணத்தை ஏற்படுத்தும். இந்த மருந்தை மேற்கண்ட நானோ பார்ட்டிக்கிள்கள் ஒரே சுற்றில் 75 சதவீதம் அகற்றியுள்ளன. சுமார் ஒன்றரை மணி நேரம் பயன்படுத்தியபிறகு 90 சதவீதம் அகற்றியிருக்கின்றன. இந்த நுண்ணிய துணுக்குகள் உடம்புக்கு வேறு தீமை பயக்காது ரத்தத்தின் பிற பணிகளிலும் குறுக்கிடாது என்று விஞ்ஞானிகள் உறுதியளிக்கின்றனர்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மூக்கில் மூக்கில் இரத்தம் மூக்கில் இரத்தம்அடிபடாமல், காயமில்லாமல் சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் கொட்டும். உண்மையில் மூக்கு ஒரு மென்மையான அவயம். மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ்பகுதியில் நுண்ணிய இரத்தக்குழாய்கள் (தந்துகிகள்) இரத்தம்
» பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு சர்க்கரை நோய்
» பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு சர்க்கரை நோய்
» இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட விட்டமின்-சி சிறந்த மருந்து.- ஆய்வில் தகவல்
»  ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum